03-07-2004, 11:19 PM
Quote:எமது மீட்புக்கு உதவுங்கள்.
கருணாவின் தான்தோன்றித்தனமான செயலினால் அவரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற போராளிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகளினாலேயே அவர்கள் தலைவரின் புகைப்படங்களை கிழித்தெறியும்படி கட்டளையிடப்பட்டுப் படங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளது. அவர்கள் கண்ணீருடன் இதனைச் செய்துள்ளார்கள். கருணாவினால் 80 புலனாய்வுப்பிரிவுப் போராளிகள் ஆதரவாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் மூத்த புலனாய்வுத்துறை உறுப்பினர் நீலன் அண்ணா உட்பட 80பேர் இருக்கின்றார்கள். இவர்கள் யாவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களே. கருணாவின் விலைபோன துரோகத்தனத்தை மறைப்பதற்காக புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் மீது குற்றம் சுமத்தியுள்ளதோடு புலனாய்வுப்பிரிவுப் போராளிகள் ஆதரவாளர்கள் 80பேரையும் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கி வருகிறார்.
இங்கு துன்புறும் போராளிகள் புலனாய்வுப்பிரிவினர் என்ற ஒரே பார்வையிலேயே கருணாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் , தாக்கப்பட்டு வருகிறார்கள். தனது மக்களுக்காக , தனது மாவட்டத்துக்காகப் போராடுகிறேன். அவர்கள் காலடியிலேயே சாகவிரும்புகிறேன் என்று கூறிக்கொண்டு தனது மாவட்டப் போராளிகளையே துன்புறுத்துவது எந்த வகையில் நீதியாகும் ? இவர்கள் மட்டுமல்ல வன்னிக்குச் செல்ல விரும்புகின்ற போராளிகளை ஆயுதத்தால் மிரட்டித்தன் பிடியில் வைத்திருக்கிறார்.
அத்துடன் கல்லடி , வாழைச்சேனை பகுதிகளில் வாழ்கின்ற பிறமாவட்டங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளார்கள். கருணாவின் விசுவாசிகளால் இந்த மிரட்டல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்களை மிரட்டித் தனக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் தனது விசுவாசிகளை ஏவிவிட்டுள்ளார். இங்குள்ள போராளிகள் , மக்கள் கருணாவிற்குப் பயந்தே அமைதியாக இருக்கின்றார்கள். அவர்களது குரலை வெளியிடுவதற்கு உரிமையின்றியே உள்ளார்கள்.
அன்னியசக்திகளிடம் விலைபோயிருக்கும் கருணா அவர்கள் தன்னையும் , தனது சுயநலத்தையும் கருத்திற்கொண்டே இவற்றைச்செய்து வருகிறார் என்பது உண்மையே. விரைவில் இவர் தனது சுகபோக வாழ்வை அன்னிய நாடொன்றில் வாழ்வதற்காகப் போய்விடப்போகிறார். இந்தச்சுயநலக்காரனின் நடிப்பினை நம்பி ஏமாறும் சில மக்களும் , அவர் சார்ந்த போராளிகளும் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவரை நம்பியிருக்கும் சிலரையே தனக்குப்பாதுகாப்பாக வைத்து இத்தேசியத்துரோகத்தில் ஈடுபட்டிருப்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
தேசியத்துரோகத்தை மேற்கொண்டிருக்கும் கருணாவின் இந்தத் துரோகத்தனத்தை உலகத்தமிழினம் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். இவர் தடுப்பில் இருக்கின்ற போராளிகள் ஆதரவாளர்களை உலகத்தமிழினம் மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான்கூட நாளை கொல்லப்படலாம். அல்லது என் குரல்கூட இல்லாது செய்யப்படலாம். உலகத்தமிழ் ஊடகங்கள் , தமிழர்கள் இந்த நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு உலகுக்கு எமது நிலமைகளைத் தெரிவித்து எமது மீட்புக்கு உதவுமாறு கோருகிறோம்.
- முகுந்தன் - (போராளி) (06.03.04)
செய்திகளுக்கு நன்றி சாந்தி அக்கா.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

