03-07-2004, 10:38 PM
தமிழ் மக்களுக்கு எதிராக பொறுப்பற்ற தன்மையில் போல் பாட்டாக கோர வடிவம் எடுக்கிறார் கருணா என்று கிழக்குப் பிராந்திய மூத்த தளபதி கரிகாலன் சாடியுள்ளார். வன்னியில் இன்று ஊடவியலாளர்கள் முன்னிலையில் பேசிய கரிகாலன் இதனைத் தெரிவித்தார்.
கிழக்குப் பகுதியிலிருந்து இன்று காலை கிளிநொச்;சி வந்தடைந்த கரிகாலன் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:
கருணாவின் இந்த முடிவுக்குப் பின்னால் சில தீய துரோக சக்திகள் உள்ளன. கிழக்குப் பிராந்திய மூத்த தளபதிகளுடனோ, படையணியினருடனோ கலந்து ஆலோசிக்காமல் கருணா தனிப்பட்ட முறையில் இயக்கத்திலிருந்து விலகி தனித்து செயல்பட முடிவு செய்துள்ளார்.
மட்டக்களப்பு-அம்பாறை தளபதிகளையும் பொறுப்பாளர்களையும் தனது முடிவுக்கு கட்டுப்பாடுமாறு கருணா வற்புறுத்தி வருகிறார். அவரால் இந்த விடயத்தில் வெற்றி பெற முடியாது.
மட்டக்களப்பு-அம்பாறை மக்கள் அனைவரும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களையே ஏற்றுள்ளனர். தேசியத் தலைவரை நிராகரிப்பதை ஒருபோதும் அந்த மக்கள் ஏற்க மாட்டார்கள். அண்மையில் மட்டக்களப்பில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வில், தேசியத் தலைவரின் படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்திய தமிழ் மக்கள், தமிழர்களே புலிகள்! புலிகளே தமிழர்கள்!! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்த் தேசியத்துக்கும் தமிழ்த் தேசியத் தலைமைக்குமான தங்கள் கடமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.
கரிகாலனுடன் இயக்கத்தின் மட்டு-அம்பாறை பொறுப்பாளர்கள் பலரும் இன்று காலை மேலதிக ஆலோசனைக்காக கிளிநொச்;சி வந்தடைந்துள்ளனர்.
நன்றி : புதினம்

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>