03-07-2004, 10:33 PM
கருணாவின் துரோகத்தனத்தால் மட்டு-அம்பாறைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்து தமிழ்த் தேசிய விசுவாத்தை சொற்ப காலத்திலேயே அம்மக்கள் நிரூபிப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பிராந்திய மூத்த உறுப்பினரும், முன்னாள் மட்டு-அம்பாறை அரசியல்த்துறைப் பொறுப்பாளருமான கரிகாலன் அவர்கள் இலண்டன் ஐபிசி வானொலிக்கு இன்று அளித்த நேர்காணலில் உறுதியளித்துள்ளார்.
நேர்காணலின் முழுமையான விபரம் பின்வருமாறு:
கேள்வி: கருணா எடுத்த முடிவு தன்னிச்;சையான முடிவு என்று சொன்னீர்கள். அது குறித்து..?
பதில்: ஆம். கருணா இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் எமது மாவட்டத்தில் இருக்கின்ற தளபதிகளையோ பொறுப்பாளர்களையோ கலந்து ஆலோசிக்கவில்லை.
தலைவர் இட்ட கட்டளையை தானாகவே ஏற்றுக்கொள்ளாது அந்தக் கட்டளையை மீறுவதாக எங்களிடம் தெரிவித்திருந்தார்.
எனது போரட்ட வாழ்க்கையில் இன்றைக்குத்தான் தலைவரது கட்டளையை மீறிப் போகிறேன் என்று கூறிக்கொண்டு தலைவரது கட்டளைக்கு எதிரான ஒரு முடிவை அவர் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து நாங்கள் பலதடவைகள் பல தளபதிகளும் பல பொறுப்பாளர்களும் அவருக்கு எடுத்து விளக்கினோம். ஆனால் அவர் எந்த ஒரு ஆலோசனைக்கும் செவி சாய்க்கவில்லை.
அப்போது, நாங்கள் கூறிய ஆலோசனைகள் எல்லாம் ஒரு போலித்தனமான ஆலோசனையாகவோ ஒரு கையாலாகத்தனமான ஒரு முடிவுகளாகவும்தான் அவர் பார்த்துக்கொண்டாரே தவிர யதார்த்த புூர்வமாக ஒரு பிரச்;சினைக்குத் தீர்வு காண்கிற அணுகுமுறைகள் அவரிடம் இருக்கவில்லை.
தலைவருடையை கட்டடளையை ஏற்று அதற்கேற்றவாறு பிரச்;சினைகளுக்குத் தீர்வு காணுகிற மனோநிலையிலும் அவர் இருக்கவில்லை.
ஆகவே எங்களுடைய தளபதிகளுடையைதும், பொறுப்பாளர்களுடையதும் கருத்துகளைக் கேட்காமல் தானே ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதை எமது போராளிகள், தளபதிகள், எமது மாவட்ட மக்கள் மீதும் திணித்து இருக்கின்றார்.
இதன்மூலம் அவர் ஒரு தன்னிச்;சையான முடிவை எடுத்து அதை இன்று நடைமுறைப்படுத்த விழைகிறார் என்று நாங்கள் கருதுகிறோம்.
கேள்வி: கருணா தன்னிசையாக முடிவு எடுக்க என்ன காரணம்?
பதில்: அவர் எங்களுடைய ஆலோசனைகளை எல்லாம் கேட்காது தலைவரது கட்டளைகளை நிறைவேற்ற விரும்பாது தானே ஒரு குழப்பமான முடிவை எடுப்பதற்கு பின்னணியில் நின்று ஏதோ ஒரு சக்தி செயல்படுவதாக அனுமானிக்கிறோம்.
அது எத்தகைய சக்தி என்பதை விரைவிலே காலம் உணர்த்தும் என்று நம்புகிறோம்.
கேள்வி: கருணா பிரச்;சினையை சுமூகமாகத் தீர்த்து கொள்ள முடியாது என்று கருதுகிறீர்களா?
பதில்: இந்தப் பிரச்;சினையை சுமூகமாகத் தீர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவருடன் பேசிப் போராடிப் பார்த்தேன்.
என்னையும் இந்தப் பிரச்;சினை ஆரம்பமானவுடனேயே தலைவர் இங்கு வருமாறு அறிவித்தல் விடுத்தார். ஆனாலும் நான் இங்கு வருவதன் மூலம் பிரச்;சினையைத் தீர்க்க முடியாது இறுதி வரைக்கும் இப்பிரச்;சினைக்கு சுமூகத் தீர்வு கண்டு தேசியத் தலைமையின் கீழ் செயற்படுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கருணாவுடன் அடிக்கடி கதைத்தேன்.
இறுதியாகக் கூட தமிழீழ நிர்வாகத்தை கைவிட்டாலும் கூட தேசியத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறேன். அதற்கும் கருணா செவிசாய்க்காது தானே தன்னிச்;சையாக நின்று சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செல்கிறோம் என்று ஒரு அறிவிப்பைக் கொடுத்திருந்தார்.
இதன் பின்னர் அவரோடு சமரசம் பேசுவதிலோ அல்லது அவருக்கு மன்னிப்பு கொடுத்து ஒரு சுமூகத் தீர்வை காண்பதிலோ தலைமைப்பீடம் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. அதனால்தான் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை விடுதலைப் புலிகள் அமைப்ப்பிலிருந்து நீக்கியுள்ளது.
எமது கட்டமைப்பின் படி ஒரு தளபதி நீக்கப்பட்டால் அடுத்த தளபதி பொறுப்பேற்று மாவட்டத்தின் போராளிகளையும் மக்களையும் வழிநடத்துகிற செயல்பாடுதான் இருந்து வருகிறது. அதன்படி துணைத் தளபதியாக செயல்பட்ட ரமேஷ் இப்போது தளபதியாக பொறுப்பேற்று மீதமுள்ள போராளிகளையும் பொறுப்பாளர்களையும் வழி நடத்துவதற்கான ஒரு செயற்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதன் மூலம் ஒரு சுமூகத் தீர்வை காண முடியுமே தவிர கருணாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதன் மூலமோ கருணாவிற்கு மன்னிப்பு அளிப்பதன் மூலமோ சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.
கேள்வி: கருணாவின் தரப்பில் பலதரப்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றனவே..இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
பதில்: கருணா தெரிவித்துள்ள கருத்துகள் எல்லாம் ஒரு வறட்டுத்தனமான ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளாக இருக்கின்றன.
நான் இறுதியாகக் கூட சந்தித்த போது இந்த தமிழீழப் பொறுப்பாளர்கள் மட்டு-அம்பாறை மாவட்டத்தைச்; சேர்ந்தவர்கள் எவருமே இல்லை என்ற கட்டமைப்பை வெளிப்படுத்தி அதனை மக்களுக்கும் விநியோகித்து எல்லா செய்தி ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தி ஒரு பிரதேசவாதத்தை கிளப்பி தன்னை நியாயப்படுத்த துணிந்திருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.
இந்த விடுதலைப் போராட்ட காலத்திலே நாங்களும் பல இடங்களில் கடுமையாக சண்டையிட்டுள்ளோம்.
தகுத்திக்கேற்ப தலைமைப்பீடம் பல பொறுப்புகளைக் கொடுத்து வைத்து இருக்கிறது.
போராளிகளும் பல யுத்த களங்களிலே நின்று போரிட்டு எல்லா மக்களது நட்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறார்கள்.
இது இன்று நேற்று ஏற்பட்ட சூழல் அல்ல. நீண்ட காலமாகவே அவர் மனதில் குடிகொண்டிருந்த குரோத மனப்பான்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த வெளிப்பாடு தான் செய்த குற்றச்;செயலை மறைப்பதற்காக தன்னை நியாயப்படுத்துவதற்காக இவ்வாறான குற்றச்;சாட்டை சுமத்துவதன் மூலம் தான் ஒரு சிறந்த தளபதி - தன் மீது ஒரு அபாண்டமான குற்றச்;சாட்டை எமது மாவட்டத்தை, மாவட்ட மக்களை புறக்கணிப்பதாக ஒரு தோற்றப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி தான் ஒரு நிரபராதி; ஆனால் தலைமைப்பீடம்தான் எதிராக இருக்கிறது என்ற கருத்தை மக்கள் மீது திணிக்க முற்பட்டு இருக்கிறார்.
இதன் மூலம் தான் ஒரு பிரதேச விசுவாசி என்பதை காட்ட முனைகிறார்.
இதில் பலதரப்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும் உண்மை இதுதான்.
கேள்வி: இந்த முரண்பாட்டை தீய சக்திகள் பயன்படுத்த முயற்சிப்பது வரலாற்று உண்மை. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?.
பதில்: எமது விடுதலைப் போராட்டத்திலே உலகம் முழுவதும் பரந்து வாழ்கிற தமிழர்கள் மிகுந்த பற்றுறுதியோடும் விசுவாசத்தோடும் நன்றியுணர்வோடும் விடுதலைப் போராட்டத்தை வெற்றி பெறச்; செய்வதற்கு அரும்பாடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் கட்டி வளர்த்த இந்த விடுதலைப் போராட்டத்தை சிதைத்து விடுவதற்காக அந்த தீய சக்திகள் முனைவதாக இருந்தால் அதற்கு பலியாவதாக இருந்தால் அது ஒரு மாபெரும் தேசத் துரோகமாகவே கருதப்படும்.
அந்தத் தேசத் துரோக நடவடிக்கையாகத்தான் இன்று அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களிடமிருந்தும் போராளிகளிடமிருந்தும் அப்புறப்படுத்தப்பட்டு அடுத்த தளபதி பொறுப்பேற்று அந்த தீயசக்திகளின் முயற்சியை முறியடித்து நிச்;சயமாக மட்டக்களப்பு அம்பாறைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்து மீண்டும் தேசியத் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட அமைப்பாக இயங்குவதற்கு எமது தளபதிகளும் பொறுப்பாளர்களும் உறுதியோடு செயல்பட உறுதி புூண்டிருக்கிறார்கள்.
நிச்;சயமாக இன்னும் சொற்பகாலத்தில் அதை தலைமைப்பீடத்திற்கு காட்டுவோம் என்பதை சர்வதேச உலக மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
கேள்வி: கருணா நீக்கம் தொடர்பாக சமாதான முன்னெடுப்புகளில் பாதிப்பு ஏற்படுமா?
பதில்: எமது தேசிய விடுதலைப் போராட்டம் எமது தேசியத் தலைவரின் கீழ் அணிதிரண்டு அனைத்து போராளிகளும் பொறுப்பாளர்களும் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
தனியொரு மனிதனுக்கு தவறிழைத்தமைக்காக ஒரு ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் அவரது பதவி நிலை பறிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்தமாக எமது விடுதலைப் போராட்ட அமைப்பின் செயற்பாடுகளுக்கு எந்தவிதமான குந்தகத்தையும் ஏற்படுத்த முடியாது.
சர்வதேச நாடுகளுக்கு எல்லாம் இந்த பேச்;சுவார்த்தைக்காக சென்று வந்த கருணா அவர்கள் பல உறுதி மொழிகளையும் எமது தேசியத் தலைமையை-தேசிய விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மக்களுக்குத் தெளிவுபடுத்தியவர்.
தெளிவுபடுத்திய சொற்ப காலத்திற்குள்ளேயே எமது விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கு அவர் உறுதிபுூண்டிருக்கிறார் என்றால் அவரது கொள்கைப் பற்றும் அவருடைய உறுதிமொழிகளும் நிச்;சயமாக ஒரு உள்நோக்கத்தை வைத்து அவர் போலியாக நடித்திருக்கின்றார் என்ற உண்மையைத்தான் புலப்படுத்தி இருக்கிறது.
ஆகவே அவருடைய செயற்பாடு நிச்;சயமாக வெற்றியளிக்கமாட்டாது. எமது விடுதலைப் போராட்டத்திலே ஒரு மாபெரும் சக்தியாக எமது மக்களும் போராளிகளும் இருக்கிறார்கள்.
ஒரு பொறுப்பாளரையோ ஒரு தளபதியையோ நம்பி இந்த விடுதலைப் போராட்டம் இல்லை.
ஆதலால் ஒட்டுமொத்தமான-பேச்;சுவார்த்தை மூலம் நிரந்தரமான தீர்வை எமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க நடத்தப்படுகிற இந்த பேச்;சுவார்த்தைகள் தனிமனிதன் ஒருவருடைய செயற்பாடும் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும் எந்த விதத்திலுமே பாதிக்காது.
கேள்வி: கிழக்கில் இருந்து பொறுப்பாளர்கள் வன்னிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?
பதில்: மட்டக்களப்பு-அம்பாறையில் செயற்பட்டு வந்த முக்கியமான தளபதிகள், துணைத் தளபதி, அரசியல் பொறுப்பாளர், இராணுவப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளார், நிர்வாகப் பொறுப்பாளர் இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.
அவர்கள் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பொறுப்புகளை ஏற்று தொடர்ந்தும் செயற்பட ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டமைப்பின் கீழ் அவர்கள் செயற்பட தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். மட்டக்களப்பு அம்பாறை மக்களும் அதை ஏற்று செயல்பட தயாராக இருக்கின்றார்கள்.
இன்று மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டம் ஒரு மிகுந்த சோக நிலையில் இருந்துகொண்டு இருக்கிறது.
தனது விசுவமான ஆட்களை வைத்து கருணா பலவிதமான பிரதேச உணர்வுகளை கிளறிவிடக் கூடிய நடவடிக்கையில் இறங்கிக் கொண்டு இருக்கிறார்.
குறிப்பாக வடக்கு கிழக்கு என்ற பேதத்தை மக்கள் மனதிலே ஏற்படுத்தி மாபெரும் பிரிவினை தோற்றத்தை உருவாக்கும் செயலிலே இறங்கியிருக்கிறார். அதற்கு மக்கள் எவருமே சுயமாக ஆதரவு அளிக்கத் தயாராக இல்லை.
கடந்த 30 ஆண்டு காலமாக இரத்தம் சிந்தி கண்ணீர் சிந்தி வளர்த்தெடுத்த இந்த விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட்டு தனது சுயலாபத்தை அடைய முற்படுகிற இந்த நடவடிக்கைக்கு எமது மக்கள் ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டார்கள். அதற்கு விலைபோகவும் மாட்டார்கள்.
அந்த மக்கள் விரும்புவதெல்லாம் இந்த பிரச்;சினைகளுக்கு நிரந்தத் தீர்வு காணப்பட்டு மீண்டும் எமது தேசியத் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட அமைப்பாக செயல்பட வேண்டும் என்பதே.
என்னிடம் பலர் கண்ணீர்விட்டு அழுதனர். இந்த நிலைமை எமது மாவட்டத்திற்கு ஏன் ஏற்பட்டது?. இந்த நிலைமையை ஒரு முடிவுக்கு கொண்டுவாருங்கள் என்று கெஞ்சிக் கேட்டார்கள்.
இன்று மக்கள் எப்போதும்போல் எம்முடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் இங்கு வந்து எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு எமது போராளிகளும் பக்கபலமாக நிச்;சயமாக இருப்பார்கள்.
கருணாவின் தவறான செயல்களுக்கு ஒத்துழைக்காது அவரை ஓரங்கட்டி எம்மோடு இணைந்து கலந்துவிட்ட விடுதலைப் போராட்டத்தை வழிநடாத்துவதற்கு எமது மக்கள் நிச்;சயமாக உழைப்பார்கள். பெரும் நம்பிக்கை இருக்கிறது.
அண்மையிலே நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்விலே ஆயிரக்கணக்கான மக்கள் எமது தேசியத் தலைவர் உருவப்படத்தை தாங்கிக் கொண்டு புலிகளே தமிழர்! தமிழரே புலிகள்!! என்ற கோஷத்தை எழுப்பி வந்தமை அவர்களது உணர்ச்;சியையும் உத்வேகத்தையும் வெளிக்காட்டக் கூடியதாக இருந்தது.
இந்த உணர்ச்;சியையும், உத்வேகத்தையும் ஒரு சிலநாட்களில் ஒரு கருணாவின் சுயநலத்துக்காக பயன்படுத்துவதை எந்தவொரு மக்களும் அனுமதிக்கப் போவதில்லை. அதற்கு அவர்கள் உடன்படவும் மாட்டார்கள்.
இந்த 30 ஆண்டுகாலம் தேசிய உணர்வையும் தேசியத் தலைமை விசுவாசத்தையும் காட்டிவிட்டு ஓரிரு நாட்களிலே அதனை து}க்கி எறிந்துவிட்டு அதற்கு எதிராக செயற்படுங்கள் என்று கோசமிடுவது நகைப்பிற்கிடமானது. கேலிக்கூத்தானது. போலித்தனமானது. இதற்கு மட்டக்களப்பு அம்பாறை மக்கள் செவிசாய்க்கமாட்டார்கள்.
இதற்கு நிச்;சயமாக ஒரு பதிலடி கொடுத்து தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர்களோடு செயற்படுவதற்கு உறுதிபுூணுவார்கள் என்பதை நிச்;சயமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கேள்வி: தேர்தல் தொடர்பாக..?
பதில்: தமிழ்த் தேசியத்தையும் விடுதலைப் புலிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டையும் நியாயப்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளை முழு தமிழ் உலகமே ஏற்றுக்கொள்வதற்கான மீண்டும் ஒரு தீர்வை உறுதிப்படுத்துக்கிற தேர்தல் இது.
புலிகள் தான் மக்கள்- மக்கள்தான் புலிகள் என்று மட்டக்களப்பிலே போட்டியிடுகிற ஒவ்வொரு வேட்பாளர்களும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த கொள்கைக்கே வாக்களிக்க எம்மக்களும் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளையே ஏகப்பிரதிநிதிகளாக ஏற்க வேண்டும்; தமிழ்த் தேசியத்தை நாங்கள் மீண்டும் ஒருமுறை உணர்த்திக் காட்ட வேண்டும் என்ற உறுதியோடு மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தில் மக்கள் வாக்களிக்கத் தயாராகி வருகின்றனர்.
இன்று இடம்பெற்றுள்ள சலசலப்புச்; சூழல் எமது மக்களின் உணர்வலைகளை எந்த விதத்திலும் பாதிக்காது.
தேர்தலிலும் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
நிச்;சயமாக தேர்தலில் மக்கள் எமது தமிழ்த் தேசியத்தையும் விடுதலைப் புலிகளே ஏகப்பிரதிநிதிகள் என்பதையும் வெளிப்படுத்துகிற முடிவை அவர்கள் அறிவித்து மிகப்பெரிய வெற்றியை அளிக்க உறுதிபுூணுவார்கள்.
இக்கட்டான சூழலில் விடுதலைப் புலிகளின் பலத்தை நிரூபிக்க ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் உறுதியோடு செயல்படுவார்கள் என்று நாம் நம்புகிறோம். தேர்தல் முடிவு மூலம் அவர்கள் நிரூபிப்பார்கள்.
கேள்வி: தேசியத் தலைவர் அவர்கள் தன்னை கொல்லத் திட்டமிட்டுள்ளார் என்று மேற்கத்திய ஊடகங்களிடம் கருணா கூறியுள்ளாரே?
பதில்: இது தன்னுடைய பலவீனத்தை நியாயப்படுத்துவதற்கான குற்றச்;சாட்டு. தான் செய்த தவறு அம்பலப்படுத்தப்பட்டு உலக மக்களால் அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அவர் ஒரு குற்றவாளியாக்கப்படுவிடுவாரோ.. தமிழ் மக்களின் துரோகியாக பார்க்கப்பட்டுவிடுமோ என்ற அச்;சம் அவருக்குக் குடிகொண்டுள்ளது.
இதனால் பொய்யான தகவல்கள் மூலம் தன்னை நியாயப்படுத்திக்கொள்ள முனைகிறார்.
இன்றும், எமது தேசியத் தலைவர் அவர்கள் கருணாவை மன்னித்து அவர் வாழ்நாள் முழுவதும் உயிரோடு வாழ்வதற்கான முடிவுகளை எடுத்துள்ளார்.
கருணா விரும்பினால் அதை நிறைவேற்றி எந்தவித துன்பங்களுமின்றி அவரது உயிருக்கு எவ்வித ஆபத்துமின்றி அவரை சுதந்திரமாக செயற்படுவதற்கான உறுதிமொழிகளையும் ஏற்பாடுகளையும் செய்ய அவர் தயாராக இருக்கிறார் என்பதை உலகத் தமிழர்களுக்கு அனைத்து ஊடகங்கள் ஊடாகத் தெரிவிக்கிறோம். இதனை அவர் நம்பலாம். இதற்கான உறுதியை தேசியத் தலைவர் அவர்கள் வழங்கியிருக்கிறார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.
எழுத்து வடிவம்: சேரமான்
நன்றி: ஐ.பி.சி. தமிழ்

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>