03-07-2004, 07:31 PM
கருணாவை மீண்டும் அமைப்பில் சேர்க்கக் கோரி பேரணி
விடுதலைப் புலிகளின் உள்வீட்டு முரண்பாடு தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு பேரணியும் கருத்தரங்கும் நேற்று இடம்பெற்றது.
நேற்றுக்காலை திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
காலை 10.00 மணியளவில் திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் ஆரம்பித்தபேரணி 11.30 மணியளவில் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தைச் சென்றடைந்தது. தமிழரசுக்கட்சி வேட்பாளர்களான அரியநாயகம் சந்திரநேரு, க.பத்மநாதன், சா.விவேகானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மகளிரணித்தலைவி மார்க்கிரட் தலைமையில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டோர் பலசுலோகங்களடங்கியபதாதைகளைத் தாங்கிச் சென்றனர். பொது மக்கள் 500 பேரளவில் கலந்து கொண்டனர். தலைவர் பிரபாவும், தளபதி கருணாவும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று கூறும் பதாதையை வேட்பாளர் அ.சந்திரநேரு தாங்கிவந்தார்.
""தளபதி கருணா செய்த தவறு என்ன? என்று கூறும் சுலோக அட்டைகளும் பரவலாக காணப்பட்டது.
கருணா அம்மானுக்கு மீண்டும் தளபதி பதவியை வழங்கு என்று கோரும் கோஷம் வானளாவ எழுப்பப்பட்டது. கருணா சார்பான பதாதைகளும் இருந்தன. அம்பாறை மாவட்ட மகளிரணி ஏற்பாடு செய்த இப்பேரணியின் முடிவில் தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் தலைவி மார்கிரட் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பலர் உரையாற்றினர். கருணா அம்மானின் செயற்பாட்டை நியாயப்படுத்திப் பேசியதைக் காண முடிந்தது. இறுதியில் வேட்பாளர் சா.விவேகானந்தனும் உரையாற்றினார்.
பேரணியிலோ, கூட்டத்திலோ விடுதலைப் புலிகள் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
பாண்டிருப்பில்:
இது இவ்விதமிருக்க, நேற்று காலையில் கல்முனை நகரில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒலிபெருக்கி மூலம் இன்றைய அரசியல் நிலைப்பாடு பற்றிப் பேசியதுடன் விடுதலைப் போராட்டத்திற்கு கிழக்கு வாழ் போராளிகள் வழங்கிய தியாகத்தையும் எடுத்துக்கூறினர்.
Thanx: வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>