03-07-2004, 07:29 PM
வீட்டுச் சின்னத்திற்கு வாக்கு சேர்ப்பதை விடுத்துவேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்வது கவலைக்குரியது - தமிழ் கூட்டமைப்பு அம்பாறை வேட்பாளர்
""தமிழர்களின் ஒற்றுமையை சர்வதேசத்திற்கு எடுத்தியம்ப வேண்டும் என்று கூறிப் புறப்பட்ட தமிழர் கூட்டமைப்பு வேட்பாளர்கள் வீட்டுச் சின்னத்திற்கு வாக்குச் சேர்ப்பதை விடுத்து தமக்குள் முட்டி மோதிக் கொள்வது வேதனைக்குரியது'' இவ்வாறு ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் கருத்தரங்கில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் விவேகானந்தன் கவலையுடன் கூறினார்.
விளையாட்டுக் கழக உறுப்பினர் சகிதம் இடம்பெற்ற தேர்தல் கருத்தரங்கில் வேட்பாளர் வேலூரான் விவேகானந்தன் மேலும் உரையாற்றுகையில்:
""விடுதலைப் புலிகளின் வழிகாட்டலுடன் இலட்சியம், கொள்கைக்காக புறப்பட்ட நாம் முதலில் 65 ஆயிரம் வாக்குகளையாவது பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு பிரதிநிதித்துவம் நிச்சயம் கிடைக்கும் அதேவேளை ஒற்றுமை கூடினால் இரண்டாவது பிரதிநிதித்துவமும் கிடைப்பது உறுதி.
ஆனால் இதனை விடுத்து வேட்பாளர்கள் சிலர் மட்டும் ஒன்று கூடி கூட்டம் வைப்பதும் சிலர் கூட்டுச் சேராமல் தனியாக ஆதரவு திரட்டுவதும் மக்கள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்னை யாரும் விலை கொடுத்து வாங்கமுடியாது. நான் விலைபோகவும்மாட்டேன். நான் சாகும்வரை தமிழ் மக்களுக்கு சேவை செய்வதையே இலட்சியமாகக் கொண்டுள்ளேன்.
பட்டம், பதவி, பஜிரோ, பாராளுமன்ற ஆசனம் என்பவற்றை எண்ணி போட்டியிடவில்லை. தமிழினத்தின் ஒற்றுமை, இறைமை, சுயநிர்ணய உரிமை, தேசியம் என்பவற்றை சர்வதேசத்திற்கு வலியுறுத்தவே தேர்தலில் இறங்கியுள்ளேன்.
எனவே, தமிழர்களே, ஒன்றுபட்டு வீட்டிற்கு வாக்களியுங்கள். ஈழம் தானாக மலரும்'' என்றார்.
கூட்டத்தில் ஜொலிவோய்ஸ், விறேய்ன் வோய்ஸ், உதயசூரியன்கழகம், பவர்கழகம், பிளே வோய்ஸ் போன்ற பல கழகங்களின் பிரதிநிதிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Thanx: வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>