03-07-2004, 07:23 PM
தாத்தா
Quote:கருணாவின் புதிய திட்டங்கள்.
கருணா அவர்கள் தனது அரசியல் தலைவர் எனக்கூறிக்கொண்ட கரிகாலன் அவர்கள் கருணாவின் சிறைப்படுத்திலிலிருந்தும் தப்பி வன்னி சென்றடைந்துள்ளதாக வன்னித்தகவல்கள் nதிரிவிக்கின்றன. தனது சொந்த ஊரான கிரான் குளத்தில் மட்டும் நம்பிச்செயற்படும் கருணா அடுத்த அரசியல்பிரிவுத் தலைவராக கிரானைச் சேர்ந்த விசுவை நியமிக்கலாம் எனத் தெரிகின்றது.
அண்மைக்காலத்தில் தேசியத்தலைமையுடன் நெருக்கமாகச் செயற்பட்டதால் பொறுப்புக்கள் எதுவும் வழங்கப்படாது ஒதுக்கி வைக்கப்பட்ட விசுவிற்கு இப்பொறுப்பினை வழங்கி தனது கட்டுப்பாட்டில் செயற்படப்பேரம் பேசுவதாக இந்நெருக்கடி காரணமாக தப்பித்தனது சொந்தங்களுடன் இருக்கும் புளிம்தீவு அரசியல் பிரிவில் செயற்பட்ட போராளி முகுந்தன் இந்நிலமைகளை உலகத்தமிழருக்குத் தெரிவிக்கும்முகமாக இணையம் ஊடாக உலகத்தமிழ் ஊடகங்களுக்குச் செய்தி வழங்கிவருகிறார்.
கிழக்கு மக்களின் தலைவனாகத்தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ள கருணா தனது சுயநலப்பதவியைத் தக்கவைக்க மக்களை இம்சைப்படுத்தி வருகிறார். கிழக்கில் தனக்கு ஆதரவு உள்ளதாக ஊடகங்களில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள பொதுமக்களைப் பலவந்தப்படுத்தி ஊர்வலங்கள் , கூட்டங்களை நடாத்த முற்படுவதாக அங்கிருந்து செய்திகள் வந்த வண்ணமுள்ளன. இதன்படி கிரான் , கொக்கட்டிச்சோலை , வந்தாறுமூலை போன்ற இடங்களில் பலவந்தப்படுத்தலுக்கு எதிர்ப்புக்காட்டிய மக்கள் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் ஆயுதங்கள் காட்டிப்பயமுறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதேவேளை தேசியத்தலைவரின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்விற்குத் தலைமை தாங்கும்படி அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியசந்திர நேருவிற்கு கோரிக்கை விடுத்ததாகவும் இதனை மறுத்த சந்திரநேருவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
அண்மைக்காலத்தில் வீட்டுக்கொரு போராளி தேவையனெக்கூறிப் பிரச்சாரம் செய்தும் கட்டாயப்படுத்தியும் போராளிகளை இணைத்துக்கொண்ட கருணா தனது உயிரையும் வசதியையும் காப்பாற்றிக்கொள்ளவா தமது பிள்ளைகளை இயக்கத்தக்கு அனுப்பினோம் என பெற்றோர்கள் கொதித்தெழுந்துள்ளதாகவும் வரும்நாட்களில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு போராட்டம் ஒன்றினை நடாத்த ஏற்பாடுகள் நடப்பதாகவும் அறியப்படுகிறது.
மேலதிகமான செய்திகள் இன்னும் வரும்.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

