03-07-2004, 07:23 PM
கருணா பிரதேச உணர்வுகளை கிளப்பி தனக்குப் பாதுகாப்புத் தேட முயல்கின்றார்ஈ.பி.டி.பி. அறிக்கை
புலிகள் தலைமையின் ஜனநாயக விரோத போக்குகளோடு கடந்த பல ஆண்டுகளாக ஒத்துழைத்து வந்த கருணா இப்போக்குக்கு தானும் இலக்காகியுள்ள இத்தருணத்தில் பிரதேச உணர்வுகளைக் கிளப்பி தனக்குப் பாதுகாப்புத் தேட முயல்கின்றார். புலிகளுக்குள் கருத்து முரண்பாடு இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
புலிகளின் தலைமைக்கும் கருணாவுக்குமிடையிலான முரண்பாட்டை வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் கிழக்கு தமிழ் மக்களுக்குமிடையிலான மோதலாக மாற எவரும் இடமளிக்கக்கூடாது என ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கருத்து வேறுபாடுகள் புலிகள் இயக்கத்துக்குள் தற்போது தீவிரமடைந்துள்ளன. ஜனநாயக அரசியல் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்ளும் சர்வாதிகாரப் போக்குகள் ஒரு போதும் நல்ல விளைவுகளைப் பெற்றுத் தராது. புலிகளுக்கு இடையிலான தற்போதைய கருத்து முரண்பாடுகளும் இதற்கு ஒரு சான்று ஆகும்.
புலிகள் இயக்கத்தில் உட்பூசல் ஏற்பட்டது. இதுதான் முதல் தடவையல்ல.
இதனை உணர்ந்து கொண்டு ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்குகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கத் தமிழ் பேசும் மக்கள் துணிவுடன் முன்வர வேண்டுமென்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.
ஏற்கனவே தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகளை பகைமையுடனான சந்தேகப்பார்வைக்கு தள்ளியும் முஸ்லிம் மக்களை தமிழ் தேசிய இனத்திற்குள் தனிமைப்படுத்தியும் வந்துள்ள புலிகளின் போக்கு இப்போது பிரதேச ரீதியான பிரிவினைக்கும் இட்டுச் செல்லும் ஆபத்துக்கு வந்துள்ளது. இதனை முளையிலேயே இனங்கண்டு நிராகரிக்க தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
Thanx: வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>