03-07-2004, 07:19 PM
புலிகளின் தலைமையில் ஏற்பட்டுள்ள அபிப்பிராய பேதம் மன உளைச்சலைத் தருகிறதுஆனந்தசங்கரி கூறுகிறார்
விடுதலைப் புலிகளின் தலைமையில் ஏற்பட்டுள்ள அபிப்பிராயபேதம் தமிழ் மக்களுக்கு, பெருமளவில் மன உளைச்சலைத் தருகின்றது என தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
விடுதலைப்புலிகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது என்னைப் பொறுத்தளவில் தப்பாகத் தோன்றினாலும் பாதிப்பு தமிழ் மக்கள் அனைவருக்கும் என்பதால் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் என்ற வகையில் என் கருத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். விடுதலைப் புலிகளின் தலைமையில் ஏற்பட்ட அபிப்பிராயபேதம் தமிழ் மக்களுக்கு பெருமளவில் மன உளைச்சலைத் தருகின்றது. இருபது ஆண்டுகளுக்குமேல் பல்வேறு போராட்டங்கள் மூலமும் பெரும் பங்களிப்போடும் பேச்சுவார்த்தைகள் மூலம் இறுதித்தீர்வு ஏற்படக்கூடிய நிலைமைக்கு கொண்டு வந்து சாதனை படைத்தவர்களும் விடுதலைப் புலிகள் தான் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் தியாகத்தோடு கூடிய தமிழ் மக்களின் பல்வேறு பேரிழப்புக்களை ஏற்படுத்திய இப்போராட்டம் எம் தமிழ் மக்களின் விடிவுகாலம் வரக்கூடிய அறிகுறிகள் தென்படும் இவ்வேளையில் அபிப்பிராய பேதங்களை களைந்து விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் இனப்பிரச்சினைக்கு ஓர் முடிவு கட்டலாம் என்பதே பலரின் அபிப்பிராயமாகும்.
இவ் அபிப்பிராய பேதம் தமிழ்மக்களுக்கு மிகவும் முக்கியமாகக் கருதப்படும் வடக்குகிழக்கு இணைப்பின் அடித்தளத்தையே ஆட்டங்காணவைத்து எதிரிகளை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்பதை உணர்ந்து உடனடியாக நடந்தவற்றை மறந்து மீண்டும் ஒன்றிணைந்து நாமெல்லோரும் தமிழர் என்ற அடிப்படையில் செயற்படுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
Thanx: வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>