03-07-2004, 07:14 PM
கருணா பிரிந்து போகும் முடிவு தன்னிச்சையாக அவரால் மாத்திரமே எடுக்கப்பட்டதாகும் நேற்று வன்னி திரும்பிய புலிகளின் சிரேஷ்ட தலைவர் கரிகாலன் கூறுகிறார்
தமிழ் மக்களையும், ஆயிரக்கணக்கான போராளிகளையும் பலிக்கடாவாக்க முயலும் வகையில் கருணா நடந்து கொள்வாரேயானால் அவரை மற்றுமொரு ""பொல்பொட்'' ஆகவே தமிழ் மக்கள் பார்ப்பார்கள் என விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கரிகாலன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வன்னி விரைந்த கரிகாலன், கிளிநொச்சியில் வைத்து ஊடகவியலாளர் மத்தியில் பேசுகையிலேயே இவ்வாறு கூறினார்.
மட்டக்களப்புஅம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த புலிகளின் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், தளபதிகள் ஆகியோர் நேற்று கிளிநொச்சி வந்திருந்தனர்.
அங்கு நேற்று நண்பகல் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடிய கரிகாலன் மேலும் தெரிவித்ததாவது:
கருணாவினுடைய பிரிந்து போகும் முடிவானது தன்னிச்சையாக அவரால் மட்டும் எடுக்கப்பட்ட முடிவாகும். எந்தவொரு பொறுப்பாளர்களையோ தளபதிகளையோ கலந்தாலோசிக்காமல் தானாக எடுத்த முடிவிற்கு போராளிகளையும் பிரதேச பொறுப்பாளர்களையும் செயற்பட வைக்க முனைகின்றார். இது நிச்சயமாக வெற்றியடையப் போவதில்லை.
அதேவேளை, அவர் தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கு பின்புலம் உள்ளதாக நாங்கள் ஊகிக்கின்றோம். அது பற்றி நீங்கள் காலப் போக்கில் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இன்று தமிழ்த் தேசிய தலைமையை வெறுத்து மட்டக்களப்பு, அம்பாறை மக்கள் செயற்படத் தயாராக இல்லை என்பதை உறுதியாக கூறி வைக்க விரும்புகிறோம்.
ஏனெனில் கடந்த 25 வருடகால போராட்டத்தில் தேசியத்தலைமையையும் அரசியல் தலைமையையும் வலியுறுத்தியே போராடி வந்திருக்கின்றோம். அண்மையில் நடைபெற்ற பொங்குதமிழில் கூட புலிகளே தமிழர், தமிழரே புலிகள் என்று தேசியத் தலைவரின் உருவப்படத்தையும் தாங்கிச் சென்ற ஆயிரக்கணக்கான மக்களின் மனதிலே இருக்கின்ற நினைவையும் தலைவரின் மீதான பற்றையும் எவராலும் நீக்கவோ, அழிக்கவோ முடியாது.
ஆகவே கருணா தனி மனித பிரச்சினைகளுக்காக மக்களை பலிக்கடாவாக்கி ஆயிரக்கணக்கான போராளிகளையும் பலிக்கடாக்களாக ஆக்குவாராக இருந்தால் அவர் மக்கள் மனதில் ஒரு பொல்பொட்டாகவே பார்க்கப்படுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்த பிரச்சினைக்கு விரைவிலே தீர்வு கொண்டுவரப்பட்டு தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டு எல்லா மக்களும் செயற்படுகின்ற ஒரு சூழ்நிலையை நாங்கள் உருவாக்குவோம் என்பதை நம்பிக்கையோடு தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.கரிகாலன், புலிகளின் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட கருணாவினால் மட்டுஅம்பாறை அரசியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலையிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Thanx: வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>