03-07-2004, 12:04 AM
manimaran Wrote:திரு.கருணா தமிழ் மக்களின் நல்விருப்பத்திற்குரிய நபராக இருந்ததற்கு அவருக்கு நிரம்பவே தகுதியிருந்தது என்பதில் சந்தேகமில்லை. அவர் ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறார். பல இக்கட்டான நிலைமைகளில் எம்மை கைகொடுத்து தூக்கி விட்டிருக்கின்றார். பல்திறமை வாய்ந்தவர்... இப்படிப்பல. ஆனால் அவர் இப்போது எந்த நிலைக்கு எம் அனைவரையும் கொண்டு வந்திருக்கிறார் என்பதை நோக்கினால் அவரது துரோகத்தனத்தின் அப்பட்டம் தெளியவரும்.
அவர் சொல்லுகின்ற விடயங்களை ஒரு கதைக்காக உண்மை என்றே ஏற்றுக்கொள்வோமே. ஆனால் அவர் அதைக் கையாண்டவிதம் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று மட்டுமல் ஒட்டு மொத்த தமிழினத்தையும் வெட்கி தலைகுனிய வைத்திருக்கும் ஒரு ஈனச் செயல். எந்தவொரு இயக்கத்தால் நாமெல்லோரும் பெருமைப்பட்டோமோ அந்த இயக்கத்தை அந்த இயக்கத்தை நம்பியிருந்த மக்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டதை துரோகத்தனம் என்று சொல்லாமல் எப்படி விபரிப்பது. இந்த பிரதேசவாதத்தை பற்றி சிந்திக்காமல் இருந்த மக்கள் கூட இப்போது பிரதேச வாரியாக தங்ளை பிரிக்கத் தொடங்குகின்ற ஒரு பெரும் அபாயத்திற்கான ஒரு அத்திவாரத்தை அவர் ஏலவே இட்டுவிட்டார். இது நிச்சயமாக ஈழத்தமிழன் வரலாற்றில் இடப்பட்ட பெரியதொரு கறை. அந்த அழியாகறையை ஏற்படுத்தியவரை எப்படி அழைக்கச் சொல்கின்றீர்கள்.
ஏற்கனவே அவர் தனக்கு தனியான ஒப்பந்தங்கள் செய்வதற்கு எடுக்கும் முயற்சிகள் எதனைக் காட்டுகின்றது. .இன்று கக்கீம் தொடக்கம் ஆனந்தசங்கரி வரை விடுதலைப் புலிகளுக்கு ஆலோசனை சொல்கின்ற நிலையை ஏற்படுத்தியுள்ள கருணாவை என்னவென்று சொல்வது?
தமிழ் மக்களது குரலினை ஒன்றாக பலமாக ஒலிக்கச் செய்து எம்அனைவருக்குமான விடுதலையை சிங்களத்திடமும் உலகிடமும் நாம் மிக உறுதியான நிலையில் இருந்து கொண்டு பெறக்கூடியதான ஒரு அரிதான நிலைக்கு பல தியாகங்களின் பின்னர் வந்திருக்கும் ஒரு நிலையில் அந்த பலத்தை, ஏகபிரதிநிதி என்ற தகுதிநிலையை சிதைத்து விட்ட திரு.கருணாவை நாங்கள் எப்படி அழைப்போம் சொல்லுங்கள்............???????????????;.
உண்மை உண்மை மணி நல்லாக இங்கு குளப்புறாங்கள் நன்றி மணி விரைவில் எல்லாத்தையும் முடிவெடுத்ததால் (ltte)
எல்லாம் இப்ப சரியாகிற்றே இனியும் இவைபற்றி வளவள எனத்தேவையில்லை நிற்பாட்டுங்கள்
:roll:

