03-06-2004, 06:53 PM
Eelavan Wrote:அன்பின் கள உறவுகளுக்கு
வெண்ணை திரண்டுவரும் நேரத்தில் தாழி உடைந்த இல்லையில்லை குலுங்கிய கதையாக போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் சென்று வெற்றியை அறுவடை செய்யவிருக்கும் நேரத்தில் எமக்குக் கிடைத்த பேரிடி கருணா அம்மானின் செய்தி
அம்மான் பக்கம் என்ன நியாயம் இருக்கிறதோ எமக்குத் தெரியாது எது எப்படியிருப்பினும் தவறிழைத்துவிட்டார் என்றே தோன்றுகின்றது ஆனாலும் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் எம்மவர்கள் முன் வைக்கும் கருத்துகள்தான் மனவேதனையைத் தருகின்றன
கருணா மத்தியில் பிளவை விததைத்தவர்கள் என்ன விரும்பினார்களோ அதனை அவர்களுக்கு சிரமமின்றி நாம் நிறைவேற்றி விடுவோம் போலிருக்கிறது கண்ணைமூடிக்கொண்டு கருணா மீது எம்மவர்கள் வீசும் துரோகக் கணைகள் தான் இப்படி எண்ணத் தோன்றுகின்றது
இதே கருணாதான் எமக்காக போராளிகளை வழிநடத்திச் சென்றவர்,இதே கருணாதான் நாம் எல்லோரும் மதிக்கும் தேசியத்தலைவரை அந்நிய இராணுவத்தின் முற்றுகைகளுக்குள் இருந்து பாதுகாக்க தோளோடு தோள் நின்று போராடியவர்.இதே கருணாதான் எமது பிரதினிதியாய் சர்வதேசமெங்கும் வலம் வந்தவர்
அன்றெல்லாம் நாம் தான் அவரை மறவன் என ஆரத்தியெடுத்தோம்,தலைவனின் தானைத் தளபதி எனப் பெருமிதத்துடன் பாராட்டினோம், சர்வதேசம் வந்தபோது சேர்ந்து நின்று புகைப்படம் எடுப்பதற்காய் அலைமோதினோம் இன்று அதே நாம் அவர் தவறிழைத்துவிட்டார் என்று தெரியவந்ததும் தூற்றுகிறோம் தவறுகளைப் பட்டியலிடுகிறோம் துரோகி எனப் பட்டம் சூட்டுகின்றோம்
தன்னுடன் தோள்நின்ற ஒரு போராளி துரோகப் பட்டம் சூட்டப்படுவதை தலைவர் நிச்சயம் விரும்பமாட்டார் வெறுமனே புலிகளுக்கு ஆதரவாளர்களாகக் காட்டிகொண்டிருக்கும் சிலர் இப்படிப்பட்ட செய்கைகளை நிறுத்த வேண்டும் இயக்கத்தின் விதிகளை வகுத்த தலைமைப் பீடமே அதனை மீறியதற்காய் அவரை விசாரிக்கட்டும் நாம் வகுக்காத விதிகளை மீறிவிட்டதாக குற்றம் சாட்டும் உரிமை எமக்கு இல்லை எனவே இவ்வாறு செய்திகளை எழுதும் தனிநபர்கள் அவற்றை வெளியிடும் ஊடகங்கள் தயவு செய்து இதனைக் கருத்தில் கொள்ளுங்கள்
.வெறுமனே தனிநபர்களுக்காக இன்றி ஒட்டுமொத்த உரிமைப் போராட்டத்திற்காக எமது குரலை ஒலிப்போம்
பி.கு:-களத்தில் இன்னொரு பகுதியில் முகுந்தன் என்பவரால் எழுதப்பட்டு தமிழ் இணைய வானொலியில் பிரசுரம் செய்யப்பட்ட கடிதம் ஒன்றைப் பார்த்தேன் வேதனை தான் எச்சம் அவரது கடிதத்தை பிரசுரித்த இணையம் அவர் எந்த நிறுவனத்தின் அல்லது மக்கள் சமூகத்தின் சார்பில் அக்கருத்தைத் தெரிவித்திருந்தார் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
துரோகி பட்டம் கட்டுவது நல்லதல்ல என்பது தான் எனது கருத்தும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

