03-06-2004, 11:13 AM
புலிகள் மத்தியில் நெருக்கடிý பற்றிய செய்திகள் இதயங்களை சம்மட்டிýயால் அடிýப்பது போல் இருக்கிறது - மனோ கணேசன்
பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக ஆயுதப் போராட்டம் செய்து இன்று அதையே சமாதானப் போராட்டமாக உருமாற்றி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் விடுதலைப்புலிகளுக்கிடையே நெருக்கடிý ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் எமது இதயங்களை சம்மட்டிýயால் அடிýப்பது போல் இருக்கின்றது.
இவ்வாறு மேல் மாகாண மக்கள் முன்னணித் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் கவசமாகும். இந்தக் கவசத்தில் துளை ஏற்படுத்துவதற்கு உள்நாட்டு துரோகிகளும், வெளிநாட்டு எதிரிகளும் இடைவிடாமல் முயற்சித்துக் கொண்டிýருக்கின்றார்கள். கடந்த காலங்களில் இவர்களது முயற்சிகள் தோற்றுப் போனதைப் போல் இனிமேலும் தோல்வியடைய வேண்டும் என்பதே மேல் மாகாண மக்கள் முன்னணியின் ஒரே எதிர்பார்ப்பாகும்.
உலகில் நூற்றுக்கணக்கான விடுதலை இயக்கங்கள் இருக்கின்றன. இவற்றில் மிகவும் கட்டுக்கோப்பான இயக்கமாகக் கருதப்படுவது விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகும். பல்வேறு புதிய போராட்டக் குழுக்கள் புலிகளின் வரலாற்றை தங்களது பயிற்சி வகுப்புகளில் கற்று தெளிவடையும் நிலைமை இன்று உலகில் காணப்படுகின்றது. இந்நிலையில் கிழக்கிலங்கை நிலைமைகள் சம்பந்தமாக வெளியாகியுள்ள செய்திகள் நாடு முழுக்க வாழும் தமிழர்களையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் சஞ்சலப்படுத்தியுள்ளன.
தமிழர்கள் இந்நாட்டிýல் எங்கு வாழ்ந்தாலும் புலிகளை தமது தன்மானச் சின்னமாக நம்புகின்றார்கள். இந்த நம்பிக்கை தான் தமிழர்களை எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை கொள்ளச் செய்கின்றது. இதற்கு மேல் மாகாணத்தில் வாழும் தமிழர்களும் விதிவிலக்கல்ல. நிலைமை சீராகி அதுவே புதிய உத்வேகத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் தந்திட வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>