06-28-2003, 07:53 PM
<span style='font-size:19pt;line-height:100%'>சுனில்தாபுரு என்பவரை சுட்டுக்கொன்றவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த மதன்குமார் எனவும் இவர் சுனில்தாபுருவுடன் இணைந்து கொழும்பில் பல சம்பவங்களைக் காட்டிக் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தினால் கொழும்பில் வாழ்ந்தவரெனவும், சுனில்தாபுருக்கும் மதன்குமாருக்குமிடையில் பணம் கொடுக்கல் வாங்கல்களில் கருத்து வேற்றுமை இருந்ததாகவும் சம்பவம் இடம்பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் அறியமுடிகிறது.
மதன்குமாரின் சகோதரரான ரமேஸ்குமார் என்பவர் புளொட் மோகனுடன் சிறிலங்காப் புலனாய்வுப்பிரிவில் கடமைபுரிவதாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
சுனில்தாப்ரு ஏற்கனவே மட்டக்களப்பிலும் சில வருடங்கள் கடமையாற்றியதாகவும் அப்போது மதன்குமார், ரமேஸ்குமார் ஆகிய சகோதரர்களுடன் சுனில்தாபுரு தொடர்புகளை வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
சம்பவதினம் கொலையாளியான மதன்குமார் சுனில்தாபுருவை சுட்டுவிட்டு உடனே ஓடிச்செல்லாமல் நின்றபோது பொலிஸார் அந்நபரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இன்னொரு வாகனத்தில் பின் சென்று வீடியோப்படம் பிடித்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதன்குமாரிடம் 'சைனட்\" குப்பி இருக்கவில்லையெனவும் வேண்டுமென்றே திட்டமிட்டு 'சைனட்\" குப்பியை மதன்குமாரிடம் தினித்து விடுதலைப்புலியாக மதன்குமாரைச் சித்தரிப்பதாகவும் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.</span>