03-06-2004, 07:14 AM
நன்றி புதினம்
இன்று காலை 10 மணி 20 நிமிடமளவில் கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இச் செய்தியாளர் மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், மட்டு-அம்பாறை மாவட்ட விசேட தளபதி ரமேஸ், மட்டு-அம்பாறை துணைத் தளபதி ராம், மட்டு-அம்பாறை துணைத் தளபதி பிரபா, தளபதி ஐpகத்தான், மட்டு-அம்பாறை புலனாய்வுப் பிரிவுத் தளபதி ரமணன், மட்டு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் தேசியத் தலைவர் அவர்களின் மேற்படி முடிவைப் பத்திரிகைiயாளர்களிற்கு அறிவித்ததோடு, பத்திரிகையாளர்களின் கேள்விகளிற்கும் பதிலளித்தனர். இதன் போது கையளிக்கப்பட்ட செய்தியறிக்கையினை வாசகர்களிற்கு இங்கு தருகின்றோம்.
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
06-03-2004
அம்பாறை-மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த திரு.கருணா தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதோடு, தமிழ் மக்களிற்கும் தமிழீழத்தின் தேசிய தலைமைக்குமான துரோகமிழைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து செல்லும் நடவடிக்கையைத் திட்டமிட்டுள்ளார்.
தளபதிகள், பிராந்தியப் பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகள் கருணாவின் இந்நடவடிக்கையோடு ஒத்துப் போக மறுத்ததோடு, தேசியத் தலைவரைச் சந்தித்து களநிலைமை குறித்து அவருடன் ஆலோசித்துள்ளனர்.
இதன்படி, திரு. கருணா தனது பொறுப்புக்களிலிருந்து நீக்கப்படுவதோடு, விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தும் நீக்கப்படுகிறார். இதனையடுத்து மட்டு-அம்பாறைக்கான விசேட தளபதியாக திரு.ரமேசும், தளபதியாக திரு. ராமும், துணைத் தளபதியாக திரு. பிரபாவும், அரசியல்த்துறைப் பொறுப்பாளராக திரு. கௌசல்யனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் என மேற்படி செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.