03-06-2004, 02:04 AM
[align=center:b10fc3e7dd]மனைவியின் சிரிப்பு
தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட ஒருவன் ஒரு துப்பறியும் ஏஜன்சியின் உதவியை நாடினான். அவள் எங்கெங்கு செல்கிறாள், யார் யாரைச் சந்தித்து என்ன செய்கிறாள் என்று ரிபோர்ட் வேண்டும் என்று கூறினான். வெறும் ரிபோர்ட்டாக வேண்டுமென்றால் ரூ. 5,000; வீடியோ படமாக வேண்டுமென்றால் ரூ.10,000 என்றனர். ஆதாரத்துடன் தன் மனைவியைக் குற்றம் சாட்ட வேண்டும் என்று எண்ணிய அவன் ரூ பத்தாயிரத்துக்கு சம்மதித்தான். ஒரு வாரம் கழித்து அந்த துப்பறியும் நிறுவனத்தினர் வீடியோ தயாராய் உள்ளதாகவும் வந்து வாங்கிக் கொண்டு செல்லும் படியாகவும் கூறினார்கள்.
வீடியோ போடப்பட்டது. தொலைவில் இருந்து அதிகம் பழக்கமில்லாத ஒருவனால் அந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் அவன் மனைவி செல்லும் இடம், சந்திக்கும் நபர்கள் எல்லாம் தெரிந்தது, ஒரு கடை, பார்க் பெஞ்ச், தெருமுனை என பல இடங்களில் ஒருவனுடன் மிகவும் அன்னியோன்னியமாக அவன் மனைவி இருந்த காட்சிகள் இருந்தன. அனைத்துக் காட்சிகளிலும் அவன் மனைவி மிகவும் மகிழ்ச்சியாகச் சிரித்தபடி இருந்தாள். இதனைப் பார்த்த அந்த கணவன் "என்னால் நம்ப முடியவில்லையே. இது என் மனைவியா?' என்றான்.
உடனே துப்பறியும் நிறுவனத்தினர் "காட்சிகளில்தான் உங்கள் மனைவி தெளிவாகத் தெரிகிறாரே என்றனர். அதற்கு அந்த கணவன்' அதற்கில்லை. இவ்வாறெல்லாம் என் மனைவியினால் சிரிக்க முடியுமா அது அவள்தானா? என்ற சந்தேகம் என்றான்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>