03-06-2004, 01:53 AM
நெருக்கடிக்குச் சுமுகமான தீர்வு, தலைமையை தலைவர் விளக்குவார் மட்டு - அம்பாறை சிறப்புத்தளபதி ரமேஷ் திட்டவட்டமாகத் தெரிவிப்பு
மட்டக்களப்பில் தோன்றியுள்ள இயக்க நெருக்கடி குறித்து தலைவர் பிரபாவுடன் விவரமாகக் கலந்தாலோசனை நடத்தியிருக்கின்றோம். நிச்சயமாகச் சொல்கிறேன் நெருக்கடிக்குச் சுமுகமான தீர்வு காணப்படும். தலைவர் மிக விரைவில் உண்மை நிலையைத் தமிழ் மக்களுக்கும், உலகிற்கும் அறிவிப்பார். இப்படி உறுதிபடக் கூறினார் மட்டக்களப்பு - அம்பாறை விசேட தளபதி ரி.ரமேஷ்.
கேணல் கருணாவின் பிரதித் தளபதியாக இருந்து மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளை வழி நடத்துபவர் தளபதி ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. தாமும், பிரதேசத் தளபதிகளும் பல்வேறு பிரிவுகளின் தலைவர்களும் வன்னியில் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து அவருடன் விரிவான பேச்சுக்கள் நடத்தி நிலைமைகளை அவருக்குத் தெளிவுபடுத்தினோம். என்று தளபதி ரமேஷ் சொன்னார். பிரச்சினையை நிதானமாகவும் ஆக்க பூர்வமாகவும் அணுக முடிவு செய்யப் பட்டிருப்பதாகவும், சுமுகமான தீர்வு பற்றிய அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்றும் அவர் மேலும் கூறி னார்.
இதற்கிடையில், கிளிநொச்சியில் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் இன்று காலை 10 மணிக்குச் செய்தியாளர் மாநாடு ஒன்று நடைபெறவிருக்கின்றது. அதில சில முக்கியமான முடிவுகளை புலிகளின் தலைமை அறிவிக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
கிழக்கில் கேணல் கருணாவுக்கு அடுத்த மட்டத்தில் உள்ள அனைத் துப் பொறுப்பாளர்களும் தளபதிகளும் உடனடியாக வன்னிக்குத் திரும்பி தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்து, அவருக்குத் தமது விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தியி ருக்கின்றார்கள் என புலிகளின் வன்னி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. கிழக்கில் புலிகளின் பிரதேசத்தில் ஒழுங்கு நிலைமையை விரைவில் தலைவர் பிரபாகரன் தமது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விடுவார் என்றும் - குழப்ப நிலைமை நின்று நீடித் துத் தாக்குப்பிடிக்காது என்றும் - கிழக்கு நிலைமை குறித்துத் தெளி வாகவும், உறுதியாகவும் தலைவர் திடமான முடிவுகளை எடுத்துச் செயற் படுவார் என்றும் - அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>