03-05-2004, 11:26 PM
விடுதலைப் புலிகளின் கிழக்கு தளபதி கர்னல் கருனா தொடர்பான செய்திகளுக்கு இந்திய செய்தி ஸ்தாபனமான ஏ.பி. செய்தி ஸ்தாபனம் முக்கியத்துவம் அளித்து வருகின்றது
விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்துடன் கிழக்குத் தளபதி கர்னல் கருனாவிற்கு ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை நேற்று முன் தினம் குறிப்பிட்ட செய்தி ஸ்தாபனமே முதன் முதலில் வெளியிட்டுள்ளது
கருனாவின் அலுவலக பேச்சாளரொருவர் தெரிவித்ததாக கூறி அந்த செய்தி வெளியிடப்பட்டது
உள்ளுர் பத்திரிகையாளர்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளை ஏற்கனவே வைத்திருந்த கேர்னல் கருனா இது பற்றி தங்களுக்கு ஒரு வார்ததை கூட கூறவுமில்லை
இது வரை தங்களுடன் தொடர்புகள் கொள்ளவுமில்லை என்றும் உள்ளுர் பத்திரிகையாளர்கள் அவர் மீது அதிருப்தியடந்துள்ளார்கள்
மட்டக்களப்பு – அம்பாறை பிராந்திய ஊடகப் பேச்சாளர் கிரிஷன் அவரது தரப்பில் இருக்கின்றார் என்பதையும் அந்த பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்
இந்திய செய்தி ஸ்தாபனமான ஏ.பி. க்கும் கேர்னல் கருனாவிற்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இலங்கையின் உள் நாட்டு மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்கள் கூறுகின்றார்கள்
தங்களால் நேரிலும் ,தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியாத கர்னல் கருனாவை நேற்று தொப்பிகல காட்டு பகுதியில் ஏ.பி. செய்தியாளர் குழு சந்தித்து விசேட பேட்டி எடுத்திருந்தமையையும் அந்த பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டு கூறுகின்றார்கள்