03-05-2004, 10:44 PM
Eelavan Wrote:இனம் என்பதை தமக்குள் கலந்து வளமான எச்சங்களைத் தோற்றுவிக்கக் கூடிய அங்கிகளின் கூட்டம் என்று உயிரியல் ரீதியில் இலகுவாக வரையறுத்துவிடலாம் ஆனால் சமோக,பண்பாட்டு கலாச்சார ரீதியில் இனத்தை திட்டவட்டமாக வரையறுக்க முடியாது வேண்டுமானால் சிறப்பியல்புகளை மட்டுமே பட்டியலிடலாம்
நண்பர் கெளஷிகன் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் கூறிவிட்டேன் பண்பாடு கலாச்சாரம் என்பவற்றை எமது இனத்தின் சிறப்புகளாகக் காட்டலாமே அன்றி அவற்றை வைத்துக் கொண்டு தமிழினத்தை வரையறுக்க முடியாது எமது இனத்தின் அடிப்படை தமிழ் மொழி அது தெரியாதவன் தமிழனே அல்ல
நண்பர் எமது இனத்தில் தற்போது எழுத்துள்ள சமுதாயச்சிக்கலை முன்வைத்து அவர்கள் தமிழன் இல்லையா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்
உமது ஆதங்கம்புரிகிறது கெளஷிகன் போர் மற்றும் வேலைவாய்ய்புகள் போன்ற பல்வேறு காரணிகளால் எமது இனம் பல்வேறு நாடுகளிற்கும் பெயர்ந்து அங்கேயே தம்மை நிலைப்படுத்திக்கொண்டிருக்கிறது இலங்கையில் போர் ஒரு புறக்காரணி என்றால் இந்தியாவில் வேலை வாய்ய்ப்பு ஒரு புறக்காரணி எப்படியிருப்பினும்
வளரும் சூழல்,பெற்றோரின் அக்கறையின்மை,வறட்டுக் கௌரவம் போன்ற பல்வேறு காரணிகளால் புலம் பெயர்ந்த தமிழினத்தின் சந்ததி இன்று தமிழ் தெரியாமல் வளர்ந்து நிற்கிறது இவற்றில் உமது உறவுகள் மட்டுமல்ல எனது உறவுகள் கூட உண்டு
பிறநாட்டு மொழி படித்தால் வேலை வாய்ய்ப்பு கல்வி போன்ற காரணங்களால் பிறமொழிகளில் பிள்ளைகள் தேர்ச்சி அடையவேண்டிய கட்டாயத்தை உணர்ந்த பெற்றோர் தாய் மொழிக்கல்வியின் அவசியத்தை உண்ராமலோ அல்லது உணர்ந்தும் தேவையில்லை என்று புறக்கணித்ததாலோ தமிழ் தெரியாத சந்ததி ஒன்று உருவாகி அதன் இன அடையாளமே இன்று கேள்விக்குறியாகியிருக்கிறது
நீங்கள் சொல்லும் கலாச்சார பண்பாட்டு எச்சங்களைத் தாங்கி நிற்கும் இவர்கள் எப்படித் தமிழன் என்று அடையாளப்படுத்த முடியும்.
எமக்குத் தனியானவையும் சிறப்பானவையுமாக நாம் கூறிவரும் பழக்கவழக்கங்களில் ஒன்று அல்லது இரண்டை மட்டும் எச்சமாக கொண்டு திரிவதால் எப்படி இவர்களை தமிழன் என்று சொல்ல முடியும்
இவற்றையெல்லம் நான் சொல்வது தனியே வரட்டுக் கௌரவத்தினாலே தமிழ் தேவையில்லை என்று ஒதுக்கியவர்களை மட்டுமே புலத்தில் வாழும் அனைத்து மக்களையும் நன் சுட்டவில்லை தாய்நாட்டிலிருப்பவர்களுக்கு எந்தவிததிலும் சளைக்காமல் தமிழை பேணியும் பண்பாட்டுக் கலாச்சாரங்கலை வளர்த்தும் வருபவர்கள் நிறையப்பேர் புலத்திலிருக்கிறார்கள்
தமிழினத்தின் அடிப்படை என்னவென்று பாருங்கள் நண்பரே இன்று இந்திய,இலங்கை மட்டுமன்றி,மலேசியா,மொறிஷியஸ் பிஜித்தீவுகள் போன்ற நாடுகளில் பலநூறு ஆண்டுகாலமாக தமிழினம் வாழ்ந்துவருகிறது இவர்கள் நீங்கள் பட்டியலிட்ட தமிழரின் கலாச்சார பண்பாட்டு பழக்கவழக்கங்களை ஒரே மாதிரி கைக்கொள்கிறார்களா இல்லையே இலங்கைத் தமிழரினதும் இந்தியத் தமிழரினதும் பழக்கவழக்கங்களிலேயே நிறைய வேறுபாடுகள் அப்படியிருக்க இவற்றை வைத்து தமிழினத்தை எப்படி வரையறுக்க முடியும்
இந்த நாடுகளில் வாழ்வோர் பல்வேறுபட்ட கலாச்சர பண்பாடுகளைப் பேணிவந்த போதும் இவர்களைத் தமிழினம் என்று தனிப்படுத்தியது அல்லது அடையாளப்படுத்தியது எது? மொழி.தமிழ் மொழி
இப்போது நாம் கைக்கொள்ளும் கலாச்சார பண்பாட்டு நடைமுறைகள் தனியே தமிழினத்துக்குரியவை அன்று திராவிட மக்களுக்குரியவை திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து இன மக்களுக்கும் பொதுவானவை அவற்றில் தமிழினத்துக்குரியது என்று சொன்னால் மொழியும் அதனடிப்படையில் வந்த சில பண்பாடுகளும் மட்டுமே எமக்குரியவை
இப்போது தமிழ் தெரியாதவன் தமிழன் இல்லையா என்பதை உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்
உண்மை <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

