03-05-2004, 07:36 PM
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தமிழர் பிரச்சினை இந்நாட்டின் தலையாய பிரச்சினையாகி அதற்கான தீர்வு இன்றேல் விமோசனம் இல்லை என்ற நிலைக்கு நாடும் மக்களும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இத்தகையதொரு உணர்வலைகள் நாடுதழுவியரீதியில் எழுச்சி பெறுவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகள் என்றால் மிகையில்லை. அவர்களிடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் வதந்திகள் தமிழர் பிரச்சினைக்கு பெரும் பின்னடைவை உண்டுபண்ணக்கூடியதாகும். கடந்த இருபது வருடகாலமாக அரச ராணுவ நெருக்கடிக்கு முகம் கொடுத்து பல்வேறு தியாகங்களுடன் உயிர்களை பலிகொடுத்து விடுதலைப்புலிகள் பெற்றுத்தந்த வரப்பிரசாதம்தான் எப்படியாவது தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என இன்று மேலெழுந்துள்ள உணர்வுப்பிரவாகம் ஆகும்.
இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை பயங்கரவாதம் தான் தலைவிரித்தாடுகிறது என்ற பேரினவாத குரல் எழுந்து உலகின் கண்முன்னே பொய்த்திரையை விரித்து மறைத்துவந்த நிலையை தகர்த்து கிழித்தெறிந்தது விடுதலைப்புலிகளின் தியாகம் நிறைந்த போராட்டமே. இரத்தச் சிந்தலும், உயிர்ப்பலியும் போராட்டத்தின் அம்சங்களானது. துயரமானது. கவலைக்குரியது. பல்லாயிரக்கணக்கான உயிர்,பொருட்சேதங்களின் பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்றினை தேடும் மன உந்துதல் ஏற்பட்டது. பிறிதொரு விதத்தில் மகிழ்ச்சியானது.
இலங்கையின் இரத்தம் சிந்துதலுக்கு முடிவுகாண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் வாய்த்துவிட்டிருப்பன சர்வதேச சமூகம் இனம்கண்டது. உதவிக்கரம் நீட்டிட ஓடோடி வந்தது. மக்களின் ஆதரவும் கிட்டியது. அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள இனவாதமும், யுத்தமும் பெரும் உதவிகரமானது என கருதியவர்கள் மட்டும் இதற்கு எதிராக செயல்பட்டார்கள். இன்றும் செயல்படுகிறார்கள்.
யுத்தநிறுத்தம், புரிந்துணர்வு உடன்படிக்கை சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்ற நிலைக்கு புலிகள் மாற்றம் அடைவார்கள் என்பது பகற்கனவாகும் என்றதொரு காலகட்டத்திலே புலிகளின் இந்த சமாதான யாத்திரை ஆரம்பமானது.
சமாதான பேச்சுவார்த்தைகளை பலவீனமானதொரு நிலையிலிருந்து புலிகள் ஆரம்பிக்கவில்லை என்பது தெளிவானது. இராணுவ மற்றும் அரசியல் சித்தாந்த பலத்துடேனே புலிகள் பேச்சுவார்த்தை மேடைக்கு ஏறினார்கள். அவர்களின் பின்புலம் இராணுவ, பொருளாதார, ஆயுத, அரசியல் சித்தாந்த பலம் மிக்கது என்பதை சர்வதேச சமூகம் நன்றாகவே அறிந்துகொண்டது.
புலிகளின் இந்த பலம் தனியாக பிரிந்து தனிநாடு அமைக்கும் அளவுக்கு சக்தியானது எனவும் அறியக்கூடியதாக விருந்ததால் அந்நிலைமையை தவிர்த்து சுமுகமானதொரு பேச்சுவார்த்தைகளின் மூலம் இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமானதொரு முறையினால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு வழிவகுப்பதன் பொருட்டு சர்வதேச சமூகம் பொருளாதார ரீதியாகவும் உதவ முன்வந்தது.
விடுதலைப்புலிகள் பலம்வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற காரணத்தினாலே அரசுகூட அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது என்ற யதார்த்தம் உள்வாங்கத்தக்கது. தமிழர் பிரச்சினையின் தீர்வுக்கான முயற்சிகளின் நீண்டவரலாற்றை அவதானித்தால் இந்த உண்மை புலப்படும். சுதந்திரத்தின் பின்னரான காலத்தில் பல கட்டங்களில் தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாதத் தாக்குதல்களும், உயிர்ப்பலிகளும் இந்த உண்மையை உறுதிப்படுத்துபவையாகும்.
சிவில் எதிர்ப்பு நடவடிக்கைகள், சக்தியாக்கிரகப் போராட்டங்கள் என்ற நிலைகளையெல்லாம் கடந்து ஆயுதப் போராட்டம் உருவானதொரு கட்டத்திலே சர்வதேச சமூகத்தின் பார்வையில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தென்படத்தொடங்கியது. அதற்கு அடிப்படைக்காரணம், விடுதலைப்புலிகளின் பலமும், அவர்கள் தமிழ்மக்களிடையே கட்டிவளர்த்துவிட்ட ஒற்றுமையுமாகும்.
இது தேர்தல் காலம் தமிழரைப் பொறுத்தவரையில் தேர்தல் தீர்க்கமானதொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணுங்கள் என்ற ஒருமித்த குரலுடன் தேர்தல் களத்திற்கு போகவேண்டிய நிலை இத்தகையதொரு சந்தர்ப்பத்திலே விடுதலைப் புலிகளின் மத்தியில் பிளவு என்ற வதந்தி வியாபித்து வருகிறது.
முரண்பாடுகள் சர்வவியாபகமானவை கட்சிகள், குழுக்கள் இயக்கங்கள்,தலைவர்கள் மத்தியில் என சகலவற்றிலும் கருத்து முரண்பாடு வியாபித்துள்ளது இயல்பு. விடுதலைப்புலிகளின் இயக்கத்திலும் முரண்பாடு நிலவுகிறது. வியப்புக்குரியது அல்ல. நீண்டகால போராட்ட அனுபவம்மிக்கவொரு இயக்கம் பிளவுபடும் அளவுக்கு அதனை இட்டுச்செல்லாது என்பதே எதிர்பார்ப்பு, அதுவும் மக்களின் எதிர்பார்ப்பு தீர்க்கமாகியுள்ளதொரு காலகட்டத்தில் இவ்வாறானதொரு பிளவுநிலை உண்மையானால் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு நீண்டகால பின்னடைவைக் காண்பது தவிர்க்கமுடியாது.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>