03-05-2004, 07:32 PM
""உங்களை எங்கள் கடவுளாக நேசிக்கும் நாம் உங்களின் கீழ் சுதந்திரமாக பணியாற்ற விரும்புகின்றோம்'
'தலைவர் பிரபாவுக்கு தளபதி கருணா கடிதம்
தமிழீழ துறைப் பொறுப்பாளர்களைத் தவிர்த்து நேரடியாக உங்களின் கீழ் சுதந்திரமாக இங்கு பணியாற்றுவதையே விரும்புகின்றேன். இதனால்தான் புலனாய்வுத்துறைப் பணிகளை இங்கு நிறுத்தியுள்ளேன். நான் உங்களைவிட்டு பிரிந்து செல்லவோ,உங்களை வெறுக்கவோ இல்லை. மாறாக உங்களை எங்களின் கடவுளாகவே பார்க்கிறோம். சிலவேளை இந்த முடிவு உங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தலாம். இதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.'' என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கு கிழக்குத் தளபதி கேணல் கருணா அம்மான் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடிதத்தின் பூரணவிபரம் வருமாறு ;
மதிப்பிற்குரிய தலைவர் அவர்கட்கு,
தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலை தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக்குவதற்காக இக் கடிதத்தை எழுதுகின்றேன்.பொதுவாக எமது போரியல் வரலாற்றில் எங்கள் மட்டக்களப்புஅம்பாறை மாவட்டம்
பெரும் பங்காற்றியுள்ளது என்பதை எவரும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது. அதுமட்டுமல்ல பல படுகொலைகளையும்,அழிவுகளையும் சந்தித்துள்ளது.
இதுவரை நடந்த போராட்டத்தில் 4550 மட்டக்களப்பு அம்பாறை போராளிகள் களத்தில் வீரச் சாவடைந்துள்ளார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 2248 வீரர்கள் உங்கள் கட்டளையை ஏற்றுவந்து யாழ்.வன்னி மண்ணில் வீரச்சாவடைந்துள்ளார்கள்.
நாங்கள் வன்னிக்களமுனையில் போரிட்டுக் கொண்டிருந்த வேளைகளிலெல்லாம் பல பல சிக்கல்களையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்திருக்கின்றோம். இவைகள் யாவும் உங்களுக்கும் தெரிந்த விடயமேயாகும்.
இருந்தாலும் உங்கள் மீதுள்ள பக்தியின் காரணமாக எல்லா விடயங்களையும் சமாளித்தே வந்திருக்கின்றோம். ஆனால் தற்போது இந்தப் பிரச்சினை பெரிதாகியுள்ளது.இதற்கான காரணத்தையும் உங்களுக்கு தெளிவாக்க கடமைப்பட்டுள்ளேன். குறைந்தது 30 இற்கும் மேற்பட்ட தமிழீழத் துறைப் பொறுப்பாளர்கள் இதுவரையில் உங்களால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இவர்களில் எவருமே மட்டக்களப்பு அம்பாறையைச் சேர்ந்தவர்கள் கிடையாது. போர் உக்கிரமாக நடைபெற்ற காலங்களில் இதை இங்குள்ள மக்களும் போராளிகளும் உணர்ந்து கொள்ளாவிட்டாலும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அமைதியான சூழ்நிலையில் இதை அனைவரும் அவதானித்து பல கேள்விகளை எழுப்புகின்றார்கள்.இதற்கு நாங்கள் பதில் கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
அதுமட்டுமல்ல இது போன்ற வெளிமாவட்ட தமிழீழ துறைப் பொறுப்பாளர்கள் இங்கு வேலை செய்வதால் பல சிக்கல்கள் உருவாகிக் கொண்டேயிருக்கிறது.
அவர்களால் எங்கள் மக்களின் உணர்வுகளையோ, போராளிகளின் உணர்வுகளையோ புரிந்து கொள்ள முடியாது. இதை விட பெரிய விடயம் நிலப்பிரதேசம் பற்றிய அறிவேயாகும். இதுவும் தமிழீழத்துறைப் பொறுப்பாளர்களுக்கு அறவே தெரியாது.
இவ்வாறு இருக்கும் போது எவ்வாறு இவர்களால் இங்கு நிர்வாகம் செய்ய முடியும். இதைவிட வேதனையான விடயம் இவ்வளவு தமிழீழத்துறைப் பொறுப்பாளர்களும் கிளிநொச்சி நகரில் சொகுசு வாகனங்களில் உலா வரும்போது 400 இற்கு மேற்பட்ட மட்டக்களப்பு அம்பாறையைச் சேர்ந்த ஜெயந்தன் படைப் போராளிகள் பளைக் காவலரண்களிலே சென்றி பார்க்கிறார்கள். இது எந்த வகையில் நீதியாகும். இந்த அமைதியான காலங்களில் எந்தஒரு வீரனும் தனது சொந்த இடத்தில் இ ருப்பதையும் தனது உறவுகளோடு இருப்பதையுமே விரும்புவான். இதைப் பற்றிஅங்குள்ள பொறுப்பாளர்கள் எவராவது சிந்திக்கிறார்களா? இன்று இந்த வாய்ப்பான காலத்தில் அந்தப் போராளிகள் எதுவித வளர்ச்சியும் அற்ற நிலையில் காவல் அரண்களிலே முடக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். இனி ஒருபோதும் இங்கிருந்து படை நகர்த்துவதையோ இங்குள்ள வீரர்கள் அங்கு வந்து மடிவதையோ இங்குள்ள பெற்றோர்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள். இதை நீங்களும் அறிவீர்கள். என்னைப் பொறுத்தவரையில் இதுவரை காலமும் வடதமிழீழ மக்களுக்காக விலை மதிக்க முடியாத உயிர்களைக் கொடுத்து திருப்திகரமாக கடமை செய்துள்ளதாக உணர்கின்றேன். தற்போதுள்ள இந்த வாய்ப்பான காலகட்டத்தில் தென்தமிழீழ மக்களுக்காக கடமை செய்வதையே விரும்புகின்றேன். அது மட்டுமல்ல இந்த மக்களுக்காக இங்கு போரிட்டு இவர்களின் காலடியில் மடிவதையே எனது இறுதி இலட்சியமாகக் கொண்டுள்ளேன். இந்த விடயத்தில் எவரும் குறுக்கிடுவதை நான் விரும்பவில்லை.
தமிழீழத்துறைப் பொறுப்பாளர்களை தவிர்த்து நேரடியாக உங்களின் கீழ் சுதந்திரமாக இங்கு பணியாற்றுவதையே விரும்புகின்றேன். இதனால்தான் புலனாய்வுத்துறையையும் இங்கு நிறுத்தியுள்ளேன். நாங்கள் உங்களைவிட்டு பிரிந்து செல்லவோ, உங்களை வெறுக்கவோ இல்லை. மாறாக உங்களை எங்களின் கடவுளாகவே பார்க்கின்றோம். சில வேளைகளில் இந்த முடிவு உங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தலாம். இதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். ஏனெனில் இங்குள்ள மக்களினதும் போராளிகளினதும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அவர்களின் அபிலாஷைகளை உங்களுக்கு சுட்டிக்காட்டாமல் இருந்த வரலாற்றுத்தவறை நான் விட விரும்பவில்லை. இதனால்தான் இம்முறை உங்களுக்கு இதை தெளிவாக உணர்த்துகின்றேன். இங்குள்ள மக்களை நீங்கள் நேசித்தால் இங்குள்ள போராளிகள்,பொறுப்பாளர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எங்களை உங்கள் தலைமையின் கீழ் நேரடியாக சுதந்திரமாக செயற்பட விடுங்கள்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>