03-05-2004, 07:30 PM
"பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகாணப்படும் விரைவில் தமிழ் மக்களுக்கு விளக்குவோம்'
மட்டு. அம்பாறை சிறப்புத் தளபதி ரமேஷ் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை பிரிவு ராணுவப் பொறுப்பாளர் கேணல் கருணா அம்மான் என்ற முரளிதரன் ஏனைய துறையினரின் தலையீடு இன்றி தலைவர் பிரபாகரனின் நேரடித் தலைமையின் கீழ் "" தனி வழி'' செல்வதற்கு முன் வந்ததை தொடர்ந்து எழுந்துள்ள நெருக்கடி குறித்து மூத்த தளபதிகளுடனும், மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஷ், மூத்த தளபதி ராம், அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன், பொறுப்பாளர் கீர்த்தி உட்பட மாவட்ட உயர் மட்டக் குழுவினருடனும் விரிவாக ஆராய்ந்துள்ள தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அமைப்பின் கட்டுக்கோப்பை காப்பாற்றும் முகமாக தீர்க்கதரிசனமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக வன்னியிலிருந்து மட்டக்களப்புக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை அமைப்பின் கட்டுக்கோப்பை மேலும் வலிமைப்படுத்துவதாகவே இருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்ட பதவிகளில் பதவிமாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தெரிய வருகிறது.
இன்றுகாலை 10 மணிக்கு கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மாநாடொன்று நடைபெறவிருக்கிறது. அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் நெருக்கடிக்கு தீர்வுகாண்பது
தொடர்பாக தலைவர் எடுத்துள்ள தீர்க்கமான நடவடிக்கைகள் பற்றி இந்த மாநாட்டில் வைத்து அறிவிப்பார் என தெரியவருகிறது.
சுமுகமான தீர்வு
இதேவேளை வன்னிசென்று தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த உயர் மட்ட மாநாட்டில் பங்குபற்றியவர்களில் ஒருவரான மட்டு.அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரி.ரமேஸ், பிரச்சினைகள் எல்லாம் சுமுகமாக முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.
"" எங்கள் தலைவருடன் மட்டக்களப்பு நிலைமைகள் குறித்து நாங்கள் விரிவாக பேசினோம். பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது நிலைமைகளை எமது தலைவர் மிக விரைவில் மிகத் தெளிவாக தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் விளக்கிவைப்பார்'' என்று சிறப்புத் தளபதி ரமேஸ் கூறியதாக தமிழ் நெட் நேற்று தெரிவித்தது.
கள நிலைமைகளை ஆக்கமான முறையில் அணுகி மிகத் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தலைவருடன் நடந்த சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியதாக "தமிழ்நெட்' மேலும் தெரிவித்துள்ளது.
பிரபாகரனுக்கு கருணா நீண்ட கடிதம்
இது இவ்விதம் இருக்க, கேணல் கருணா அம்மான் தலைவர் பிரபாகரனுக்கு மார்ச் 2 ஆம் திகதியிட்டு நீண்ட கடிதம் ஒன்றை மட்டக்களப்பிலிருந்து அனுப்பி வைத்திருக்கிறார்.
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலை தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக்குவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்ற பூர்வபீடிகையோடு கடிதத்தை ஆரம்பித்துள்ள கருணா அம்மான்,
""தமிழீழ துறைப்பொறுப்பாளர்களை தவிர்த்து நேரடியாக உங்களின் கீழ் சுதந்திரமாக இங்கு பணியாற்றுவதையே விரும்புகிறேன். இதனால்தான் புலனாய்வுத் துறையையும் நிறுத்தியுள்ளேன் என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
தனியான யுத்த நிறுத்த உடன்படிக்கை
தனி வழி செல்லத் தீர்மானித்துள்ள கேணல் கருணா அம்மான் கிழக்குக்கு என்று தனியான யுத்த நிறுத்த உடன்படிக்கையொன்றை அரசு செய்ய முன்வரவேண்டுமென்று அரசாங்கத்தை கோரியதாகவும், இதற்கு ராணுவ தரப்பில் இப்பொழுது அந்த அவசியம் எழவில்லை என்று கூறி மறுத்துவிட்டதாகவும் பி.பி.சி. செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி விடுதலைப் புலிகளின் பேச்சாளரான தயா மாஸ்டரிடம் கேட்ட பொழுது ""கேணல் கருணா இப்பொழுது ஒரு தனியாள் அவரது சிரேஷ்ட தளபதிகள் அனைவரும் மட்டக்களப்பு பகுதியிலிருந்து இப்பொழுது வன்னி வந்து தலைவருடன் பேச்சு நடத்துகிறார்கள். அவருக்கு ஆதரவு கிடையாது எனவே அரசுடன் தனியான பேச்சுவார்த்தையை கேட்டிருப்பது புத்திசாதுரியத்தனமானது அல்ல'' என்று அவர் பதிலளித்திருக்கிறார்.
""தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரசு யுத்த நிறுத்த உடன் படிக்கையொன்றை ஏலவே செய்திருக்கிறது. இப்பொழுது அமுலில் உள்ளது. பிரிந்ததாக சொல்லப்படும் மற்றொரு குழுவோடு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை. ஆயினும் நாம் நிலைமைகளை அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறோம்'' என்று இதுபற்றி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத்தும் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>