03-05-2004, 11:01 AM
புலிகள் விவகாரம்: கருணா தரப்புடன் உடன்படிக்கை இல்லை இலங்கை ராணுவம்.
கருணா தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கப் பிரிவுடன் எந்தவிதமான பாதுகாப்பு உடன்படிக்கையும் செய்து கொள்ள மாட்டோம் என இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
மட்டக்களப்பில் நடந்த சில அரசியல் கொலைகள் தொடர்பாக புலிகள் இயக்க உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனுக்கும், கிழக்குப் பகுதி புலிகளின் கமாண்டரான கருணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் தனது ஆதரவு படைகளுடன் கருணா தனியாக செயல்பட ஆரம்பித்துள்ளதாகவும், தங்களுடன் இலங்கை அரசு தனியே பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
ஆனால், அதை புலிகள் மறுத்துள்ளனர். சிறிய கருத்து வேறுபாடு உள்ளதாகவும், தாற்காலிகமான இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்பட்டுவிடும் என்றும் அந்த அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நார்வே அமைதிக் குழுவினர் நேற்று புலிகளின் பிரதிநிதிகளை கிழிநொச்சியில் சந்தித்துப் பேசினர். அவர்கள் கொழும்பில் இருந்து கிழிநொச்சி செல்ல இலங்கை ராணுவம் தனது ஹெலிகாப்டரை வழங்கியது.
இந் நிலையில் இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளர் சிரில் ஹெராத் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கை ராணுவ கமாண்டர்கள் மூலமாக கருணா எங்களைத் தொடர்பு கொண்டார். அப்போது தன்னுடன் தனியே ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கோரினார். ஆனால், இதற்கு ராணுவ அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துளளனர்.
கருணா தரப்புடன் எந்தவித உடன்படிக்கையிலும் அரசு கையெழுத்திடாது. பிரபாகரனுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. அப்படி இருக்கையில் அதே தரப்பைச் சேர்ந்த இன்னொருவருடன் எப்படி உடன்பாடு செய்ய முடியும்?
இப்போதைக்கு இரு தரப்பினருமே அமைதி உடன்பாட்டை மதித்து நடப்பதாக உறுதியளித்துள்ளனர். இன்றைய சூழலில் எந்த பிரச்சனைக்கும் நாங்கள் தயாராக இல்லை. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதாமல் இருக்க வேண்டும் என்றார் சிரில்.
Thatstamil.com
எத்தனையோ தமிழ் மக்களினதும் அவர்களின் பிள்ளைகளினதும் குருதியாலும் இழப்பாலும் வளர்க்கப்பட்ட இயக்கம் சிதறுண்டு போவதற்கு எனி மக்கள் இடமளிக்கக் கூடாது...எனவே மக்கள் மெளனமாக இருக்காமல் ஒரு காத்திரமான இயக்கத்தை மக்கள் ஆதரவுடன் 25 வருடங்களாக வழி நடத்திய தலைவனின் பாதையில் எல்லோரையும் இணைந்து செல்ல வழியுறுத்துவதே இவ்வேளையில் சாலச் சிறந்தது....!(our view)
:evil:
:!:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>