03-05-2004, 05:26 AM
நாங்கள் எம் தலைவரை விட்டுப் பிரிந்து செல்லவோ, வெறுக்கவோ இல்லை, மாறாக அவரை எங்களின் கடவுளாகவே பார்க்கிறோம் - கேணல் கருணா
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2004, 10:26 ஈழம் ஸ
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் கருணா தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனுக்கு எழுதியதாகக் கருதப்படும் கடிதத்தின் பிரதியொன்று, கிழக்கிலிருந்து வெளிவரும் தமிழ்அலை பத்திரிகையின் வெள்ளிக்கிழமை வெளியீட்டில் பிரசுரமாகியுள்ளது.
தமிழீழ நிர்வாகத் துறையினரின் கீழ் செயற்படாது, நேரடியாக தலைவரின் தலைமையில், தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் செயற்படுவதையே தான் விரும்புவதாகத் தெரிவித்து, வரையப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இக்கடிதத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செயற்படுவதாகவோ, அப்படி செயற்பட விரும்புவதாகவோ, அல்லது தனிக்கிளையாகச் செயற்பட விரும்புவதாகவோ எதுவும் குறிப்பிடப் படவில்லை.
கிழக்கில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் பல அரிய போராளிகளுக்கு, தமிழீழ நிர்வாகத் துறையில் இடமளிக்கப்படவில்லை என்பதால், பல போராளிகள் கிழக்கில் அதிருப்தியடைந்திருப்பதால், அந்நிலைப்பாட்டை சுட்டிக்காட்ட வேண்டிய கடப்பாடு தனக்கு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் அக்கடிதம், விரைவில் தலைவரின் நல்ல பதிலுடன், தமிழீழத் துறைப் பொறுப்பாளர்களை விடுத்து, நேரடியாகத் தேசியத் தலைவரின் கீழ் சுதந்திரமாக கிழக்கில் பணியாற்றுவதையே விரும்புவதாகவும் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.
மேலதிக விபரங்கள் விரைவில் புதினம் இணையத் தளத்தில் பிரசுரமாகும். தமிழ்அலையில் வெளிவந்த கடிதத்தின் பிரதியொன்று தமிழ்நெற்.கொம் இணையத்தளத்தில் பிரசுரமாகியுள்ளது. அதன் பிரதியை வாசகர்கள் விரைவில் புதினத்தில் காணலாம்.
source: http://www.eelampage.com/index.shtml?id=20...51026223766&in=

...... 8)