03-04-2004, 10:41 PM
BBC Wrote:அடுத்த ஐனாதிபதியாகும் எண்ணத்தில் அநுரா பண்டாரநாயக்க
தாம் பதவிக்கு வந்ததும் ஐனாதிபதி ஆட்சிமுறையை முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு பிரதான கட்சிகளும் கூறிவருகின்ற போதிலும், அடுத்த ஐனாதிபதியாகத் தெரிவாகக்கூடிய தகுதி தனக்கே இருப்பதாக அநுரா பண்டாரநாயக்க பத்திரிகையொன்றிற்குப் பதிலளித்துள்ளார்.
கொழும்பில் வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகைக்குப் பேட்டியளிக்கும் போது, எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் தமது கூட்டணிக் கட்சியில் போட்டியிடுவதற்கு தனக்கு மட்டுமே தகுதி இருப்பதாகத் தெரிவித்துள்ள அநுரா, இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை, பொதுத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் கருத்துவேற்றுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக அவதானிகள் கருத்துக் கூறியுள்ளார்கள். ஐனாதிபதி ஆட்சியை இல்லாமற்செய்வது, சமாதானத்தைத் தொடருவது, புலிகளுடன் மட்டும் பேசுவது, இடைக்கால நிர்வாக அலகை ஏற்றுக் கொண்டு பேச்சு நடத்துவது, அதிகாரப் பரவலாக்கத்தை கருத்திற் கொள்வது, பிரதமர் கதிரையில் யார் அமர்வது போன்ற ஏராளமான பிரச்சனைகள் இக்கட்சியின் பலராலும் பலவிதமான கருத்துபேதங்களுக்கு மத்தியில் ஊசலாடுவதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
நன்றி - புதினம்
ரணில் - சந்திரிகா அதிகாரப்போட்டியே இன்னும் தீரவில்லை. அடுத்த முறையாவது ஜனாதிபதியாகலாம் என்று ரணில் நினைத்துக் கொண்டிருக்கின்றார். அதற்கிடையில் அநுரா வேறு. எல்லாம் அண்ணன் எப்போ எழும்புவான் திண்ணை எப்போ காலியாகும் என்ற மனப்போக்குதான்.அதிகாரபோட்டிதான் அனைத்து பிரைச்சனைகளுக்கும் காரணம். அதில் எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றுதான். எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

