03-04-2004, 07:11 PM
அதிகாரப் பரவலாக்கல் கிடைக்கவே கிடையாது! ஜே.வி.பி. தலைவர் திட்டவட்டமாக அறிவிப்பு
அதிகாரப் பரவலாக்கல் கிடையவே கிடையாது என்று ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார். அதிகாரப் பரவ லாக்கல் குறித்துப் பேசுவதை நிறுத்துமாறும் அவர் கோரியிருக்கிறார். அதி காரப் பரவலாக்கல் குறித்து ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பேசிவருகை யிலேயே சோமவன்ஸ அமரசிங்க அதிகாரப் பரவலாக்கலை நிராகரித்திருக் கிறார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் "பிஸ்னஸ் டுடே" என்னும் மாத சஞ்சி கைக்கு வழங்கியிருக்கும் செவ்வியிலேயே ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க இவற்றைத் தெரி வித்திருக்கின்றார்.
தேசியப் பிரச்சினையைப் பொறுத் தவரை அதிகாரப் பரவலாக்கல், பிரிவினை அல்லது அதிகாரப் பங்கீடு அல்லது ஏனைய திட்டங்கள் குறித்து மக்கள் பேசுகின்றனர். ஆயினும், அனைவரும் அதிகாரப் பகிர்வின் கைதி களாகியுள்ளனர். தயவுசெய்து அதி காரப் பகிர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துங்கள் என்றே நாம் கூறுகின் றோம் என்று அவர் செவ்வியில் கூறி யிருக்கிறார்.
பிரபல பத்திரிகையாளரான லுசியான் ராஜகருணாநாயக்க அச்சஞ்சிகைக்காக ஜே.வி.பி. தலைவரைச் செவ்வி கண்டிருக்கிறார்.
செவ்வியில் அதிகாரப் பரவலாக் கல் தொடர்பாக ஜே.வி.பி. தலைவரிடம் எழுப்பப்பட்ட வினாக்களும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
<b>லுசியான் ராஜகருணாநாயக்க:-</b> அதி காரப் பரவலாக்கல் என்னும் சொல் ஜே.வி.பியின் பிரச்சினைகளை ஏற் படுத்தியிருப்பதை நான் அறிவேன். ஆயினும், அதிகாரப் பரவலாக்கலின் பெறுபேறாகவே பல மாகாண சபை களில் ஜே.வி.பி. இடம்பெற்றிருக்கி றது. 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு மேலும் பலமளிப்பது அல்லது அதனை அமுல்படுத்துவது தொடர்பாக நீங்கள் ஏன் சிந்திக்கக் கூடாது? தீர்வின் ஓர் அம்சமாக அது இருக்காதா?
<b>
சோமவன்ஸ அமரசிங்க:-</b> 13ஆவது அரசமைப்புச் சட்டதிருத்தத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் நாங்களும் எதிர்த்தோம் என்பதை மறந்து விடவேண்டாம். விடுதலைப் புலிகளும் அதனை எதிர்த்தார்கள் என்பது மிக வும் முக்கியமான விடயமாகும். அத னால் அது ஒரு நல்ல தீர்வாக இருக் காது என்று நாம் தீர்மானித்தோம். அதுதொடர்பாக நாம் எமது சுதந்திர மான கொள்கையைக் கொண்டிருக்கி றோம். இது ஒரு சிக்கலாகப்போகி றது. ஏனெனில், புலிகளுக்கு என்ன தேவை என்பது தொடர்பாக, பிரிவினை தொடர்பாக நாம் முதலாவது நடவடிக்கையை எடுத்திருக்கின்றோம். 13 ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் யோசனையை வழங்கியிருக்கிறது. இம்மண்ணில் அது நிலைபெற்றிருக் கிறது. அதனாலேயே நாம் எதிர்க்கி றோம்.
<b>லுசியான் ராஜகருணாநாயக்க:-</b> ஆனால், இந்தியா அதில் முக்கிபங்கு வகிக்கவில்லையா?
<b>சோமவன்ஸ அமரசிங்க:-</b> ஆம், அது வெற்றிபெறும்; அதுசெயற்படும் என்று இந்தியா கூட நினைத்தது. கடந்த காலங்களில் இந்தியா ஏராள மான தவறுகளைச் செய்திருக்கிறது. ஆரம்ப காலத்திலேயே விடுதலைப் புலிகளை இந்தியா வளர்த்தது. அது மிகப்பெரிய தவறாகும். இந்தியா விலேயே பிரிவினைவாதம் ஒரு பிரச்சினையாக இருக்கையில் இலங்கையில் பிரிவினைவாத அமைப்பு ஒன்றுக்கு அவர்கள் உதவினார்கள், ஒத்துழைத்தார்கள். இதனால், இந்தியாவில் ஏற்படக்கூடிய எதிர் விளைவுகள் குறித்து அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். இப்பொழுதாவது இந்த சிறையிலிருந்து நாம் வெளிவரவேண்டும். அதிகாரப் பகிர்வு ஒரு சிறை. - இவ்வாறு அவர் செவ்வியில் தெரிவித்திருக்கி றார்.
நன்றி - சூரியன் வெப்தளம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>