03-04-2004, 07:04 PM
<img src='http://www.virakesari.lk/20040305/PICS/santhi.jpg' border='0' alt='user posted image'>
சலீம் நானா: உங்களை அதிரவைத்த சேதி ஒன்று சொல்லுங்கோ?
பறுவதம் பாட்டி: கட்டையிலே போகிற வயது எனக்கு. என்னை எதுவும் பாதிக்காது. ஆனால் கந்தர் அம்மான்தான் ரேடியோ செய்தியை கேட்டு அதிர்ந்து போனார். ஆறு ஆயிரம் போராளிகளுடன் கருணாஅம்மான் தனி வழி போகத் தீர்மானித்து விட்டார். வன்னியிலுள்ளவர்கள் சகல சம்பத்துகளையும் அம்பாளித்துக் கொண்டு மேலும் ஆயிரம் போராளிகளை அனுப்பு என்று கேட்கிறார்கள். அதற்கு இணங்க மறுத்தே கருணா அம்மான் தனி வழிபோகத் தீர்மானித்திருக்கிறார் என்பதே அந்த செய்தி.
சலீம் நானா: நெருப்பு இல்லாமல் புகையாதே ஏதோ நடந்திருக்கிறது. பொட்டு அம்மான் ஆட்கள்தான் யூ.என்.பி. வேட்பாளரையும் ஈ.பி.டி.பி. ஆதரவாளர்களையும் கொன்றிருக்கிறார்கள் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
பண்டா ஐயா: இந்த கொலைகள் ரி.என்.ஏ.யின் வெற்றியை கிழக்கில் பாதிக்கும் தானே! கிழக்கு புலிகளுக்கு இந்தக் கொலைகள் வீண் அவப் பெயரை தந்திருக்கும் தானே!
சலீம் நானா: இந்த அவப்பெயரை துடைக்க இப்படி ஒரு செய்தி நாடகம் ஆடப்பட்டிருக்கிறது என்பது தான் என் கணிப்பு.
பறுவதம்பாட்டி: பிரதேச வாதம் தேர்தல் காலங்களில் சக்கை போடு போடும் இதனை உள் நோக்கத்தோடு சிலர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பறுவதம் பாட்டி: உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சேதி எது?
சலீம் நானா: புதன் இரவு எம்பிலிப்பிட்டியாவில் நடந்த சுதந்திர முன்னணியின் கூட்டத்தில் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஸ பேச எழுந்த பொழுது அங்கு திரண்டிருந்த மகாஜனங்கள் எதிர்காலப் பிரதமருக்கு ஜெயவேவா என்று கோஷித்து கரகோஷம் செய்திருக்கிறார்கள்.
இதனை கேட்டு நான் புல்லரித்துப் போனேன்.
பண்டா ஐயா: இந்தக் கூட்டத்தில் ஜே.வி.பி. யின் பிரதம தோழர் சோமவன்ஸ அமரசிங்கா பேசும்வரை காத்திருந்து விட்டு அவர் போனபின்னர்தான் ஜனாதிபதி கூட்டத்துக்கு வந்திருந்தார். அதாவது ஐந்து மணி நேரம் கழித்துத்தான் வந்திருந்தார்.. இது உங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்றல்லவா நான் நினைத்தேன்.
சலீம் நானா: இது பச்சைக்கார ஊடகங்களின் சரடு. வேறு ஜோலி இருந்ததாலேயே தலைவி தாமதித்து வர நேர்ந்தது.
பறுவதம் பாட்டி: ஜே.வி.பி. தோழர் என்ன பேசினார்?
பண்டா ஐயா: கடன் வாங்குவதற்காக உலக வங்கியும் ஐ.எம்.எப். நிறுவனமும் போடும் கண்டிஷன்களுக்கு நாங்கள் தாளம் போடத்தேவைஇல்லை. உலகில் வேறு நிதி நிறுவனங்கள் உள்ளன. குறைந்த வட்டிக்கு இவை எங்களுக்கு கடன் தரத் தயாராக இருக்கின்றன.
பறுவதம்பாட்டி: வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று சொல்லும் அமெரிக்கா முதலில் வடகிழக்கில் ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும். அமெரிக்காவுக்கு விடுக்கும் கோரிக்கை இதுதான் என்று தோழர் பேசியிருக்கிறார்.
சலீம் நானா: இங்கு பேசிய உங்கள் தலைவி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற சகலரும் உதவ வேண்டும். வன் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ஊழல் மோசடிகளற்ற அரசை நிறுவுவேன் என்றும் சபதம் செய்திருக்கிறார்.
பண்டா ஐயா: லங்கா ஒறிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனமொன்று தேர்தல் பிரசாரங்களை நோட்டமிட்டு இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்று கணிப்பீடு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
சலீம் நானா: உங்கள் கட்சிதான் மீண்டும் ஆட்சிபீடம் ஏறும். என்று சொல்லியிருக்கும். அதுதான் இங்கே சொல்லுகிறீர்.
சலீம் நானா: நானும் அதனை படித்தேன். தமிழ் கூட்டமைப்புடன் சேர்ந்தால்தான் இவர்கள் மீண்டும் ஆட்சிபீடம் ஏற முடியும் என்று தான் கணிப்பீடு சொல்லியிருக்கிறது.
இவர்களின் கணிப்பீட்டின்படி சுதந்திர முன்னணிக்கு பேரியல் ஆட்களையும் சேர்த்து 105 ஆசனங்கள் கிடைக்கும் முன்னணியின் ஆதரவுக் கட்சியான ஈ.பி.டி.பி.க்கு ஒன்று கிடைக்கும் எனவே மொத்தம் 105 சீட்.
ஐக்கிய தேசிய முன்னணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் இ.தொ.கா. வையும் சேர்த்து 98 ஆசனங்கள் கிடைக்கும் என்று தான் கணித்திருக்கிறது.
தமிழர் கூட்டமைப்புக்கு 21 ஆசனங்கள் கிடைக்கும். சமாதானம் முன்னெடுக்கப்படுவதை விரும்புபவர்களான இவர்கள் ஐ.தே.மு. உடன் சேர்ந்து 119 எம்.பி.களோடு ஆட்சிபீடம் ஏறுவார்கள் என்கிறது இந்த லங்கா ஒறிக்ஸ்.
பறுவதம் பாட்டி: தனிக்கட்சி என்று பார்க்கும் பொழுது சுதந்திர முன்னணிக்கு 105 ஆசனங்கள் இருப்பதால் ஜனாதிபதி முதலில் ஆட்சியை அமைக்குமாறு சுதந்திர முன்னணியைத்தான் அழைப்பார். அவர்கள் ஆட்சியை அமைக்க ஓ.கே. தெரிவித்துவிட்டு ஆறுமுகனுடனும் ஹக்கீமுடனும் பேரம் பேசுவார்கள். கூடவே ஐ.தே.மு. விலிருந்து சிலரை விலைக்கு வாங்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். எனவே தேர்தல் முடிந்தாலும் புதிய ஆட்சியை அமைப்பதிலும் சிக்கல் தோன்றும் போகிற போக்கைப் பார்த்தால் எல்லாம் சிக்கலாகத்தான் இருக்கப்போகிறது.
ஆட்சியமைக்க தமிழர் கூட்டமைப்பின் ஆதரவை ரணில் கோரினால் புலிகள் கண்டிசன்கள் போடுவார்கள் இதுவும் சிக்கல் தான்
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>