03-04-2004, 06:45 PM
"எமக்குள் பிளவு இல்லை' விடுதலைப் புலிகளின்
மட்டு. அம்பாறை அரசியல் பிரிவு தெரிவிப்பு
பிரபாவின் தலைமையில் கருணாவின் வழிகாட்டலுடன் செயல்படுகின்றோம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் பிளவு இல்லை. இயக்கத்துக்குள் பிளவு என்று சில ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று புலிகளின் கிழக்கு தளபதி கேணல் கருணா அம்மானின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக தமிழ் நெட் செய்தி வெளியிட்டுள்ளது.
"எமது தேசியத் தலைவரின் நேரடி ஆணையின் கீழ் நாங்கள் செயல்படுவோம்' என்று அந்த பேச்சாளர் சொன்னதாகவும் "தமிழ் நெட்' இணைய தளம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளிவரும் புலிகளின் ஆதரவுப் பத்திரிகையான "தமிழ் அலை' நாளிதழும் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பிரிவை மேற்கோள் காட்டி மறுப்புச் செய்தியொன்றை நேற்று வெளியிட்டிருந்தது. ""விடுதலைப்புலிகளின்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் அவரின் இலட்சியப்பற்றுறுதியோடு கிழக்கு தளபதி கேணல் கருணா அம்மானின் வழிகாட்டலுடன் செயற்பட்டு வருகிறோம் எமக்கிடையில் எந்தப் பிளவுகளும் இல்லை' என்று முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் தலைமையை விட்டு கிழக்குத் தளபதி கேணல் கருணா அம்மான் விலகிவிட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பு கொண்ட போதே இத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் செயற்படுகிறோம். பிரிந்து தனியாக செயற்படுவதென்று முடிவு எடுக்கவில்லை.
கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பாதுகாப்பு அபிலாஷைகள் மன உணர்வுகள்என்பவற்றை
நிறைவேற்ற கேணல் கருணா அம்மானின் தலைமையில் உறுதியோடு செயற்படுவோம் என்றும் மக்கள் மத்தியில் வீணான பீதியையும் அச்சத்தையும் தோற்றுவிக்கும் வகையில் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே சகல முடிவுகளும் எடுக்கப்படும் என்றும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதேவேளை இயக்கத்துக்குள் பிளவு என்று புதன் இரவு வானொலிகள் ஒலிபரப்பிய செய்தியை கவலையோடு கேட்ட மக்கள் பலரும் அந்த செய்தியின் உண்மைத் தன்மையை அறிவதில் அதிக ஆர்வம் காட்டியதை அவதானிக்க கூடியதாயிருந்தது.
சில பத்திரிகைகளும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன. இதனால் அவர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்திருந்தது.
பலரும் இச் செய்தியை நம்ப மறுத்தனர். ஒரு சிலர் இயக்கத்துக்குள்ளும் பிரதேச வாதம் தலை தூக்கி விட்டதா? என்று கேட்டு பெருமூச்சு விட்டனர்.
இத்தனை வருடங்களாக கட்டிக்காத்து வந்த பிரதேசங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டிக் காக்க வேண்டும். தமிழினத்தின் விடிவுக்கு ஒற்றுமை தான் பலம் கொடுக்கும் என்றும், இனத்தின் விடுதலைக்காக பாடுபடும் பலரும் தமக்குள் பேசிக்கொண்டதையும் அவதானிக்கக் கூடியதாயிருந்தது.
வன்னி சென்றனர்
இதேவேளை மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஷ் அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன், தளபதி ராம், உட்பட அரசியல் துறையை சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும் வன்னி சென்றுள்ளதாக தெரியவருகிறது
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>