03-04-2004, 04:36 PM
இயக்கத்தில் பிளவா? விடுதலைப் புலிகள் மறுப்பு!
வியாழன், 4 மார்ச் 2004
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையை ஏற்க மறுத்து தனித்து செயல்பட அதன் கிழக்குப் பகுதி தளபதி கர்னல் கருணா முடிவெடுத்திருப்பதாக வந்த செய்திகளை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளது!
இது தொடர்பாக இலங்கையின் கிழக்குப் பகுதியில் கொக்கடிச் சோலையில் இருந்து வெளிவரும் தமிழ் அலை நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தாங்கள் தமிழீழத்தின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலும், மட்டக்களப்பு தளபதி கர்னல் கருணா வழிகாட்டுதலின் படியும் நடந்து வருவதாக அப்பகுதி புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் கூறியுள்ளார்.
தமிழீழ விதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறுவது என்றோ, தனித்து செயல்படுவது என்றோ எந்தவிதமான முடிவையும் தாங்கள் எடுக்கவில்லை என்றும், தமிழ் மக்களிடையே அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதாக திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுவதாக கர்னல் கருணாவிற்கு நெருக்கமான இரண்டாம் கட்ட தளபதிகள் கூறியதாக தமிழ் அலை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைக்கும் அதன் கிழக்கு பிரிவிற்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இலங்கையில் கடைபிடிக்கப்பட்டு வரும் போர் நிறுத்தம் பாதிக்கப்படலாம் என்றும் இலங்கை வானொலி நேற்று செய்தி அளித்தது. அதற்கு இந்த மறுப்பை விடுதலைப் புலிகளின் கிழக்கு பிரிவு அளித்துள்ளது.
webulagam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>