03-04-2004, 02:45 PM
kuruvikal Wrote:BBC நீங்கள் போட்ட BBC செய்தி நிறுவனத்தின் செய்தி முன்னரும் சிவாஜினி போட்ட செய்தி பின்னரும் வந்திருக்க சந்தர்ப்பம் இருந்ததால் தான் எமது கருத்தில் 'அல்லது' என்ற பதம் பாவிக்கப்பட்டிருந்தது....!
குருவி, நான் போட்ட செய்தி (பிளவு செய்தி) முதலிலும் சிவாஜினி போட்ட செய்தி (புலிகளின் மறுப்பு செய்தி) இரண்டாவதாகவும் BBC செய்தி நிறுவனம் வெளியிட்டது. எப்போதும் ஒரு பிரைச்சனை பத்திய செய்திதான் முதலில் வரும் மறுப்பு செய்தி முதலில் வராது. நான் அவர்களுடைய தளத்தை (BBC நிறுவனத்தின்) பார்க்கும்போது இருந்த பிளவு செய்தியை போட்டேன். பின்னர் நான் மீண்டும் அவர்களுடைய தளத்தை பார்பதற்க்கு முன்பு மறுப்பு செய்தியை சிவாஜினி இந்த களத்தில் போட்டிருந்தார். இப்போது புரியும் என நினைக்கிறேன்.
kuruvikal Wrote:இப்போ அதுவல்ல பிரச்சனை...பிளவு குறித்து BBC போட்ட முதல் செய்தியை வெளியிட நீங்கள் காட்டிய ஆர்வத்தை ஏன் பிந்தயதைப் போடக் காட்டவில்லை...?! தமிழ் நெற் மறுப்புத் தெரிவிப்பதற்கும் அதே செய்தி BBC இல் வருவதற்கும் இடையில் வேறுபாடு உண்டு....அப்படி இல்லை என்று நீங்கள் கருதியிருந்தால் பிளவு பற்றி AP போட்ட செய்தியோடு நிறுத்தாமல் ஏன் BBC செய்தியையும் கொண்டு வந்தீர்கள்.....?!
இந்த பிரைச்சனை பற்றி எனது கண்ணில் பட்ட செய்திகளை எல்லாம் இங்கு போட்டிருக்கிறேன். ஏற்கனவே சொன்னமாதி சிவாஜினி அந்த செய்தியை போட்டதால் அதை மீண்டும் போடவில்லை. இதில் என் குற்றம் எதுவும் இல்லை.
kuruvikal Wrote:எனவே நீங்கள் எதை வலுயுறுத்திக் கூற முற்படுகிறீகளோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு மிகுதிச் செய்திகளை மறைக்கவா முற்பட்டிருக்கிறீர்கள்...??! காரணம் செய்தியின் தன்மை பற்றி நாங்களும் சிவாஜினியும் கருத்துக் கூறிய போது அதைக் கவனத்தில் கொள்ளாது உங்கள் நிலைப்பாட்டுக்கு ஏதுவான செய்திகளைப் போடவும் பின்னர் உங்கள் செய்திகள் குறித்து பலமாக கேள்விக் கணைகள் வந்தவுடன் தான் நீங்கள் செய்தியின் நம்பகத் தன்மை பற்றி தேட வெளிக்கிட்டு இவ் நிகழ்வுகள் தொடர்பான மற்றைய செய்திகளையும் வெளியிட்டுள்ளீர்கள்...! அதுதான் உங்கள் மீது ஒரு சந்தேகம் வரக் காரணம்...அது நியாயமாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்....சந்தேகம் வர நடந்தது உங்கள் தவறே.....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
செய்திகள் மூலம் நான் எதையும் வலியுறுத்தி கூறவோ இல்லை மறைக்கவோ முயலவில்லை. செய்திகளை அந்த நிறுவனங்களின் பெயரை போட்டு அப்படியே போடுகின்றேன். எனது கருத்துகளை தனியாக போடுகின்றேன். இதில் நான் தவறு ஏதும் செய்ததாக தெரியவில்லை.
1) பத்திரிகையாளனும் இல்லை
2) செய்திவழங்கும் தொழிலை செய்யவில்லை.
3) இந்த களத்தை நடத்துவனும் இல்லை.
மற்றவர்களை போல் நானும் ஒரு சாதாரண யாழ் கள் வாசகன். எனக்கு நேரம் கிடைக்கும்போது யாழ் களத்தை பார்க்கின்றேன், விசயங்களை பகிர்ந்து கொள்கின்றேன், எனது கருத்தை எழுதுகின்றேன். அவ்வளவு தான். இன்றைக்கு நான் எழுதலாம், நாளை எழுதாமல் விடலாம், சில நாட்கள் கழித்து மீண்டும் எழுதலாம் எதுவுமே எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை பொறுத்தது. அப்படி எனக்கு நேரம் கிடைக்கும்போது கண்ணில் செய்திகளையும் போட்டு வருகின்றேன். இதை நான், நீங்கள், சிவாஜினி இல்லை மற்ற யாழ் நண்பர்கள் யாரும் செய்யலாம். இதில் நீங்கள் குற்றம் சாட்ட எதுவுமே இல்லை. நீங்கள் நான் சில செய்திகளை போடவில்லை என்று நினைத்தால் நீங்கள் அதை போடுங்கள் ஏற்கனவே போட்டும் இருக்கின்றீர்கள். என்னை பொறுத்தவரை நான் எதையும் மறைக்காமல் கண்ணில் படும் செய்திகளை போட்டுள்ளேன். நான் இயன்றவரை எல்லா கேள்விகள் விமர்சனங்களுக்கு பதில் அளித்தே வந்திருக்கின்றேன். தெரியாவிடில் தெரியாது என்றும் தவறாக இருந்தால் மன்னிப்பும் கேட்டிருக்கின்றேன். ஒரு சிலரை போல பதில் அளிக்காமல் நழுவுவதும் இல்லை. எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வதும் இல்லை.
குருவி, நான் சொல்லிய விளக்கம் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நான் இயன்றவரை தொடர்ந்து எழுதுவேன். படிப்பவர்கள் தீர்மானியுங்கள். சரி பிழைகளை சுட்டிகாட்டுங்கள். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமே இல்லை கடவுள் உட்பட.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: