03-04-2004, 10:47 AM
இயக்கத்தில் பிளவா?: மறுக்கின்றனர் விடுதலைப் புலிகள்
கொழும்பு:
விடுதலைப்புலிகள் இயக்கதில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த அமைப்பின் கிழக்குப் பகுதி தளபதியான கருணா என்ற முரளிதரன் தனியே செயல்பட ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால், இதை புலிகள் இயக்கம் மறுத்துள்ளது.
புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மனின் உத்தரவால் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கடந்த திங்கள்கிழமை இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் கருணா அதிருப்தியுடன் இருப்பதாகவும், இதனால் தான் அவர் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதாகவும் போலீஸ்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால், பிரபாகரனின் தலைமையில், அவரது கட்டுப்பாட்டின் கீழ் கருணா இயங்கி வருவதாக புலிகள் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. இயக்கத்தில் எந்தப் பிளவும் ஏற்படவில்லை என்று கருணாவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக புலிகளுக்கு நெருக்கமான இன்டர்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில், வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும், தங்களை தனிப் பிரிவாகக் கருதும்படியும், இனி தங்களிடமே அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் எனவும் நார்வே அமைதிக் குழுவினரிடம் கருணா தனது தூதர் மூலம் தெரிவித்துள்ளதாக இலங்கை அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் நாட்டின் வட பகுதியில் உள்ள தனது ஆதரவுப் படைகளை கிழக்குப் பகுதிக்குக் கொண்டு வர ராணுவத்தின் உதவியை கருணா கோரியுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
புலிகள் அமைப்பில் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் கருணா. இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் முன்பு மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் கருணாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாவின் இந்த அறிவிப்பையடுத்து, நார்வே தூதுக்குழு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடன் அவசர ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர், அமைதிக் கண்காணிப்புக் குழு அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் புலிகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து நார்வே குழுவினர் டிரான்ட் புருஹாவ்டே தலைமையில் கிழிநொச்சிக்கு விரைந்துள்ளனர். அங்கு புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுடன் அவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அரசியல் செய்தித் தொடர்பாளரான மங்கல சமரவீரா கூறுகையில், புலிகள் இயக்கத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அது பெரிய அளவிலான பிளவு இல்லை. இதனால் அமைதி முயற்சிகளுக்கு பிரச்சனை வராது. புலிகள் இயக்க என்று நம்புகிறோம் என்றார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் செய்தித் தொடர்பாளரான ஜி.எல். பெரிஸ் கூறுகையில், புலிகள் இயக்கத்தின் உள் விஷயங்கள் குறித்து கருத்து ஏதும் கூற முடியாது. இது சிறிய விவகாரம் தான். இதனால் போர் நிறுத்த ஒப்பந்ததுக்கு எந்த பிரச்சனையும் வராது. மேற்கொண்டு இந்த விவகாரம் குறித்து தேவையில்லாமல் பேசுவது சரியல்ல என்றார்.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>