03-03-2004, 11:06 PM
thampu Wrote:BBC Wrote:thampu Wrote:<b>வழுதி எழுப்பிய கேள்விகளுக்கு விவேகானந்தர் கூறிய புகழ் மிக்க சிறுகதை ஒன்று இங்கு மிகபொருத்தமாக இருக்குமெனக்கருதி கீழ் இணைத்துள்ளேன்......</b>
...........................
'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'
'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.
<b>ஆக,
இத்தால் சகலரும் அறிவது என்னவென்றால்.........
இது மதத்திற்கு மட்டுமல்ல இனத்திற்கும் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் பொருந்தும்.</b>
எந்த ஒரு இனமோ மொழியோ கலாச்சாரமோ மற்றதுக்கு தாழ்ந்தது அல்ல. அவற்றை ஒப்பிட்டு பார்ப்பதே தவறு.
அன்பர் பி பி சி,
விவேகானந்தரின் குட்டிக் கதையில் கிணற்றுத்தவளை இந்து மதமோ தமிழ் மொழியோ தமிழ் கலாச்சாரமோ அல்ல.
<b>உலகத்தில் யாரும் தனது மதம்தான் தனது மொழிதான் தனது கலாச்சாரம்தான் பெரிது என நினைத்து விடக்கூடாது என்பதைத்தான் விவேகானந்தர் மட்டுமல்ல அற்ப பயலான தம்புவும் தாழ்மையுடன் இத்தால் அறியத்தருகின்றேன்................ </b>
தம்பு, நான் அப்படி எடுத்துக்கொள்ளவில்லை. நான் சொல்லவந்தது மதம், இனம் மொழியை ஒப்பிட்டு பார்க்காமல் மற்றவர்களின் மதம், இனம் மொழிக்கும் மதிப்பு குடுத்து வாழவேண்டும் என்று. சொல்லும் முறை தான் வேறு மற்றப்படி உங்கள் கருத்துடன் முரண்படவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

