03-03-2004, 08:33 PM
எனது முன்னைய கருத்துக்களில் இனமாணமுள்ள யாரையும் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளவும்.
எண்பதுகளின் இறுதிப்பகுதியில் எனது உயர்தர பரீட்சைக்கு யாழ் வடமராட்சிப் பகுதியில் உள்ள எனது வீட்டில் இருந்து தயார் படுத்துதலில் ஈடுபட்டிருந்த வேளை, பிள்ளை பிடிகாரர்களின் ***** தொல்லை காரணமாக அங்கு மேற்கொண்டு இருக்க முடியாமல் பரந்தன் பகுதியிலுள்ள எனது உறவினர் வீட்டிலிருந்து தயார் படுத்தலில் ஈடுபட்டு இருந்தேன். ஒரு நாள் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் படித்து விட்டு வீடு திரும்பும் போது பரந்தன் சந்தியில் வைத்து பிள்ளை பிடிகாரர்களிடம் பிடிபட்டேன்.
என்னை கொண்டு போய் கிளினொச்சிப் பகுதியிலுள்ள ஈ***** முகாம்(வீடு) ஒண்றில் அடைத்து வைத்திருந்தார்கள். அம்முகாமில் எல்லாமாக யாழ்பாணம்,கிளினொச்சி மாவட்டங்களை சேர்ந்த முப்பது பேரளவில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தோம். ஒவ்வொரு நாளும் பயிற்சி தருவார்கள், மறுப்பவர்கள் மீது ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குவரர்கள்.
என்னை கொண்டு போன இரண்டாம் நாளிரவு ஆறு மணியிருக்கும் இரண்டு இளம் பெண்கள் இருக்கும் அழ அழ எமது பக்கத்து அறையில் கொண்டு வந்து அடைத்தார்கள். ஒரு சில மணி நேரத்தில் அவர்களை எங்கோ திரும்ப கொண்டு சென்றார்கள். திரும்ப பல மணி நேரம் களித்து முனகல் சத்தத்துடன் கொண்டுவந்து அடைக்கப்பட்டார்கள். அவர்களுடைய வாய் கட்டப்பட்டிருந்தாக எம்மால் உணர முடிந்தது. பின் அந்த அறையினுள் பலர் செல்வதையும், அதன் பின் பலமணி நேரம் முணகல் சத்தம் கேட்டு இறுதியாகா ஓய்ந்ததையும் உணரக்கூடியாதாக இருந்தது. மறு நாள் காலையில் அப்பெண்களை அங்கு கொண்டு வந்ததற்கான எந்த ஒரு அறிகுறுகளும் தென்படவில்லை. பின்பு தான் அறிந்தோம் அப் பெண்கள் இந்திய உயர் இராணுவ அதிகாரிகளுக்கு காமப் பசி தீர்க்க பிடித்து வரப்பட்டவர்கலெண்றும், அதன் பின் முகாமில் உள்ளவர்களுக்கும் இரையாக்கப்பட்டு, பின் குளக்கட்டுக்கருகில் புதைக்கப்பட்டார்களாம்.........
சில நாட்கள் சென்ற பின், என்னுடன் எட்டுப் பேர் சேர்ந்து தப்பியோடமுடிவு செய்து, ஓரிரவு பின்பக்கத்தால் முட்கம்பி பாயும்போது பிடிபட்டு மிருகத்தனமாக தாக்கப்பட்டு, நாம் புலிகளோவென்று விசாரிக்கப்பட்டோம். ஒருவரின் முழங்கால் சில்லு முற்றாக அடித்து உடைக்கப்பட்டிருந்தது. மறு நாள் இரவு கால் உடைந்தவரை இழுத்துக்கொண்டும், எம்மையும் கூட்டிக்கொண்டும் குழக்கரை பக்கமாக கூட்டிச்செல்லப்பட்டோம். எமக்கு ஏதோ நடக்கப் போவது மட்டும் தெரிந்தது. நாம் நால்வர் பயத்தில் பக்கத்திலிருந்த பெரிய வாய்க்கால் ஒன்றைத்தாண்டி பற்ரைகளுக்குள்ளால் சுடச் சுட ஓடத்தொடங்கினோம். நான் வயல்களினூடாக ஓடி பரந்தன் வந்து ஓரிரு நாள் ஒளித்திருந்து பின் பின்பக்கங்களுக்கால் வவுனியா வந்து பின் கொழும்பு வந்து பின் சில மாதங்களின் பின் லண்டன் வந்து சேர்ந்தேன். எனக்கு இன்று வரை மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. இதன் பின் நித்திரை இல்லாத இரவுகள் தான் இன்று மட்டும். ஆண்டவா அவர்களை காப்பாற்று.
இங்கு வந்த பின் தான் கேள்விப்பட்டேன் நடு நிலைமை வானொலியின் பணிப்பாளர் அதே கிளினொச்சி முகாமில் பொறுப்பாளராக இருந்தவராம்.
இப்போது சொல்லுங்கள் யாருக்கும் வால் பிடிக்கத்தான் அதை எழுதினேனா அல்லது ஆயுதம் ஏந்தி போராடிய பின் காசு அடித்துக்கொண்டு வந்த படியால் தான் எழுதுகிறேனா அல்லது நான் பட்ட துன்பத்தின் வெளிப்பாடா என்று.
இவர்கள் எமக்கு காட்டிய போராட்டம் கொலை, கொள்ளை, கற்பளிப்பு, சமூக சீரழிவுகள், காட்டிக்கொடுப்பு.......இப்படிப் பல பல.
இன்றும் எனக்கு விடுதலைப் புலிகளின் மேல் உள்ள கோபம் என்னவென்றால், ஏன் இந்த அரக்கர்களை அடியோடு அழிக்கவில்லை என்றுதான்.
இந்த சமாதான காலத்தில் எல்லோரும் இணைந்து இங்கு தப்பி ஓடி வந்திருக்கும் அரக்கர்களின் முகத்திரை ஆதாரங்களுடன் கிழித்தெறியப்படுதல் வேண்டும்.