03-03-2004, 08:31 PM
நீங்கள் சொல்லும் இக்காலத்தில் நான் தாயகத்தில் வாழ்ந்தேன். அப்போ உங்களால் கௌரவமாக சொல்லும் இந்திய ராணுவம் ஊர்களுக்குள் புகுந்து செய்த பாலியல் வல்லுறவுகள் , கொலை , கொள்ளை , வதை எழுத்துக்களுக்குள் வடிக்க முடியாதவை. அந்த அவலங்களை இன்று நினைத்தாலும் இதயம் வலிக்கிறது. நீங்களோ லண்டனிலிருந்து சொகுசாய் வாழ அங்கு செத்துக்கொண்டிருந்த மக்களாய் நாமிருந்தோம். இதுவெல்லாம் உங்கள் கண்ணுக்கு எழுத்துக்கு இன்றல்ல என்றுமே தெரியாதவை. உங்களுக்கு சுூடமேற்றி ஆராத்தியெடுத்தவர்களுக்குத்தானே உங்கள் விசுவாசம் இருக்கும். அதை எப்படி மாற்ற முடியும்.
அந்த நாட்களுக்குள்ளிருந்து எப்படி உயிர் பிழைத்தோம் என்பது ஆச்சரியமாகத்தான் இன்றும் இருக்கிறது.
உண்மைகளை உண்மையாக ஏற்றுக்கொள்ளுங்கள். அதைவிட்டு உங்கள் பொய்யான தகவல்களை அதுவும் இந்திய ராணுவம் எதையும் செய்யாது தமிழரைக்காக்க வந்தது:
சும்மாயிருந்தவர்களைச் சீண்டினார்கள் என்றெல்லாம் சொல்லாதீர்கள். எங்களை ஆழவந்தார்கள் அதை நாங்கள் எதிர்த்ததனால் அழிக்கத் தொடங்கி தோற்றவர்கள் அவர்கள்.
வசாவிளானிலிருந்து வெளிக்கிட்ட இந்தியப்படைகள் புன்னாலைக்கட்டுவனில் வந்து ஒரே குடும்பத்தவர்களை தந்தையை , மகனைக் கொன்று , மகனின் மனைவியை வல்லுறவு கொண்டு கொன்றார்களே...., குப்பிளான் கேணியடி வைரவர் ஒழுங்கையால் மாலை புல்லுக்கடகத்துடன் வந்து கொண்டிருந்த 55வயது மூதாட்டியை முதுகுச்சட்டை கிழித்து வல்லுறவுக்கு முயற்சித்து அந்தத்தாயை நோயாளியாக்கினார்களே..., புன்னாலைக்கட்டுவன் முகாமின் பற்றைகளுக்குள் பல பெண்களைச் சிதைத்தார்கள் , பல இளைஞர்களை ஓடமுற்பட்டார்கள் அதனால் சுட்டோம் என்றெல்லாம் பொய் சொல்லிக் கொன்றார்களே....இப்படி நிறைய அக்கிரமம் புரிந்தார்களே இதையெல்லாம் உங்கள் காது கேட்கவுமில்லை, எழுதவுமில்லை. ஏன்.....?
ஓ....வில்லங்கச்சண்டை அதுதான் கொன்றார்கள் என்றுதானே சொல்லப்போகிறீர்கள்.
வேண்டாம் தாத்தா வலறாறுகளைத் திரித்து உங்கள் பொய்யுரைகளை மெய்யுரையாக்க முயலாதீர்கள்.