03-03-2004, 04:27 PM
Eelavan Wrote:நல்லது B.B.C
மீண்டும் ஒரு முறை நான் சொன்ன செய்தியை வாசியுங்கள்
ரவூப் தனது கட்சிக் கூட்டத்தில் தனது மக்கள் மத்தியில் மு.கா.வின் கோட்டை எனக் கருதப்படும் அம்பாரை மாவட்டத்தில் போய் புலிகள் தாம் எமது பலம் அவர்கள் தாம் எமக்குப் பாதுகாப்பு என்று சொல்வது தனி ஒருவராக ரவூப் இன் நிலைப்பாட்டையன்றி ஒட்டுமொத்த மு.கா. கட்சியின் நிலைப்பாடாகத் தான் கொள்ளவேண்டும் ஏனெனில் அதையே இவர் மட்டக்களப்பிலோ,அல்லது யாழ்ப்பாணத்திலோ சொல்லியிருந்தால் அதனை புலிகளுக்கு ஆதரவான முஸ்லிம் மக்களையோ அல்லது தமிழ் மக்களையோ திருப்திப் படுத்தக் கூறியதாகக் கொள்ளலாம்
ஆனால் இவர் கூறிய இடம் இவர்களது கோட்டை அங்கு பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் இடத்தில் <b>ரவூப் முஸ்லிம்களின் குரலைத் தான் பிரதிபலித்திருப்பார் </b>
ஈழவன், முஸ்லீம் காங்கிரசோட தேர்தல் அறிக்கை எனக்கு படிக்க கிடைக்கலை. உங்ககிட்ட இருந்தால் களத்தில் போடுங்கள்.
நீங்கள் சொன்னமாதிரி இணைந்து வாழவேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தால் அது வரவேற்கத்தக்க நல்ல விடயம் தான். ஒரு பிரைச்சனை தீர்ந்துவிடும்.
இங்கு ஒரு விசயம் தான் இடிக்குது. முன்பு முஸ்லீம் காங்கிரஸ் தனிஅலகு கேட்டபோது அது முஸ்லீம்களின் குரலாக இருந்தால் அதை குடுப்பதை தவிர வேறுவழியில்லை அதுதான் நியாமும் கூட என்று சொன்னேன். அப்போது அது முஸ்லீம்களின் குரல் இல்லை என்று சொன்னீர்கள். இப்போது அதே முஸ்லீம் காங்கிரஸ் சேர்ந்து வாழவேண்டும் என்று சொல்வதாகவும் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் குரலைத் தான் பிரதிபலித்திருப்பார் என்றும் சொல்கிறீர்கள். நமக்கு சார்பான ஒரு கருத்தை சொல்லும்போது அது முஸ்லீம்களின் குரல் இல்லையானால் அது தனிப்பட்ட குரல்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[quote=Eelavan]
சரி இப்போது பிரிந்து செல்லும் கோரிக்கைக்கு வருவோம்
பாரளுமன்றத்தில் மு.கா வுக்கோ,பேரியல் அஷ்ரப்பிற்கோ,அதாவுல்ல, கிடைக்கும் சொற்ப பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு அம்பாறை மாவட்ட மக்கள் பிரிந்து போக விரும்புகிறார்கள் என்று சொல்லலாமே தவிர ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பிரிய விரும்புகிறார்கள் என எப்படிச் சொல்ல முடியும்
அப்படி என்று பார்த்தால் தமிழ்க் கூட்டமைப்பில் இருந்து வரப்போகும் 3 அல்லது 4 முஸ்லிம் பிரதினிதிகள் சேர்ந்திருப்போம் என்று சொல்வர் யார் சொல்வதை முஸ்லிம் சமூகத்தின் குரலாக எடுப்பது
அதனை விட பிரிந்து செல்லும் முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவம் யார்
பேரியல் அஷ்ரப்? இவர் தன்னை அடகு வைத்த மக்கள் சுதந்திரக் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பாரும் சிறுபான்மை இன மக்களுக்கு சுய நிர்ணய உரிமை இருப்பதை மறுக்கிறது ஒற்றையாட்சி முறை தொடரவேன்டும் ஒன்றுபட்ட இலங்கை என்பது அவர்கள் வாதம் எனவே பேரியல் அஷ்ரப் இற்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை அமைச்சுப் பதவியைத் தவிர
இந்தப் பட்டியலில் மக்கள் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கும் மற்ற எல்லோரும் அடங்குவர்
எனவே முஸ்லிம்களின் தலைமை யார்?
இப்பவே இந்தப் பூசல் தோன்றி ஒருவர் கூட்டத்தில் மற்றவர் வேட்டுத் தீர்ப்பதில் வந்து நிற்கிறது
பேரியல் அஷ்ரப்,ரவூப்,அதாவுல்லா,மயோன் முஸ்தபா இன்னும் பலர் தமக்குத் தனித் தனி கிடைக்கக் கூடிய ஆதாயங்களை கணக்குப் பார்க்காமல் முஸ்லிம் பெரியவர்களின் சொல் கேட்டு ஒன்றாகப் போட்டியிட்டிருந்தால் வரும் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பினருக்கு அடுத்தபடியாக பெரும்பான்மை பெற்றிருப்பர் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இவ்விரு கூட்டமைப்புகளின் ஆதரவின்றி எந்தக் கட்சியாலும் அரசமைக்க முடியாது அன்று கேட்டிருக்கலாம் பிரிவதா சேர்வதா என்று
இன்று நன்மை கிடைக்கப் போவதென்னவோ தாங்கள் குழம்பியதும் மற்றவர்களைக் குழப்புவதும் தான்
தற்போது முஸ்லீகளின் அரசியல் தலைமைகள் பிரிந்து நிற்பது வருத்தமான விசயம் தான். அது முஸ்லீம்களுக்கு மட்டும் அல்ல தமிழர்களுக்கும் நல்லதல்ல. நமக்கு யார் முஸ்லீம்களின் பிரதிநிதி எது முஸ்லீம்களின் கோரிக்கை என்று தெரியாமல் போய்விடும். அதனால் ஒரு தெளிவான தீர்ப்பை முஸ்லீம்கள் தந்தால் நல்லது. அது ரவூப் ஹக்கீமோ பேரியல் அஷ்ரபோ யாரா இருந்தாலும் சரி. எதற்கும் தேர்தல் முடிவுகள் வரட்டும்.
இன்னொரு விடயம் அவர்கள் தனி அலகு கேட்டது கிழக்கிலே தான். மற்றய இடங்களில் உள்ள தமிழர்கள் தொடர்ந்து அந்தந்த இடங்களிலேயே இருப்பார்கள். இது புலிகளின் சுயாட்சி கோரிக்கை போலத்தான். சுயாட்சி கொடுத்தவுடன் மற்ற இடங்களில் உள்ள தமிழர்கள் உடனே வட கிழக்கு போக போகிறார்களா இல்லையே. அதே போலதான் இதுவும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

