03-02-2004, 06:46 PM
adipadda_tamilan Wrote:BBC Wrote:ஐனாதிபதி முறைமையை ஒழிக்க முனைந்தால் நாம் எதிர்ப்போம்: ரவூப் ஹக்கீம்
எந்த அரசியல் கட்சியாவது நிறைவேற்று அதிகாரம் கொண்டஐனாதிபதி முறைமையை ஒழிக்க முனையுமானால் அதை தாம்எதிர்ப்பதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மாவத்தகமவில் இடம்பெற்ற தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர்இதனைக் கூறியுள்ளார்.
<b>நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறையானது,சிறுபான்மை இனங்களிற்கு பாதுகாப்பை தருவதாக இருப்பதாகதனதுரையில் குறிப்பிட்ட அவர், இத்தகைய முறைமையை ஒழிக்கமுயல்வதானது சிறுபாண்மையினரை பொறுத்த வரையில்நியாயமற்றதாகும்</b> எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இம்முறைமையை ஒழிப்பதற்கு மிகுந்தஉற்சாகத்தோடு செயற்படும் ஐனாதிபதி, 1994 ஆம் ஆண்டில், தான்ஆட்சிக்கு வந்த போது ஏன் அவ்வாறு செய்யத் தவறினார் என்றும்அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நிறைவேற்று அதிகார ஐனாதிபதி முறைமையை ஒழிப்பேன் எனவும், அதற்கு மக்கள் ஆணையைத்வழங்க வேண்டும் எனவும் கூறும் ஐனாதிபதி, பின்னர் அதனைசெய்யத் தவறுவது ஐனாதிபதிக்கு ஒன்றும் புதிதல்ல என்றும்சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறைமையை ஒழிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,தனது கட்சியின் ஆதரவை வழங்க முன்வந்த போதும்,ஐனாதிபதியால் அது மறுக்கப்பட்டதையையும் அமைச்சர் ரவூப்ஹக்கீம் தனதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்மக்களது பாதுகாப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே உறுதிப்படுத்த முடியுமென சம்மாந்துறையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரசின் முதலாவது உத்தியோகபூர்வ பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி - புதினம்
இந்த ஆள் ஒரு அடிமட்ட ஒன்றுக்கும் உதவாத அரசியல்வாதி என்பதை இப்போதாவது விளங்குதா?? ஏன் நேரத்திற்கு நேரம் மாறி மாறி கதைக்கிறார் என்டது அந்த அல்லாவுக்கே வெளிச்சம். அதற்காக நான் மற்றவர்களை நல்லவர்கள் என்றும் சொல்லவில்லை.
தம்பு ராசா எங்கப்பா உம்மைக் காணவேயில்லை. இங்த சுத்துமாத்த எதுக்குள்ள சேர்க்கப் போறியள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடிபடா தமிழன் நான் ஒருபோதும் ரவூப் ஹக்கீமுக்காக வக்காலத்து வாங்கவில்லை. ரவூப் ஹக்கீம் மட்டும் அல்ல பொதுவா எந்த அரசியல்வாதி மீதும் எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. உதாரணத்துக்கு ஒரு விளக்கம் சொல்லுறேன் கேளுங்கள். இன்றைக்கு புலிகளை எதிர்க்கும் ஆனந்தசங்கரி போன தேர்தலில் புலிகள் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லியே வாக்கு கேட்டு நாடாளுமன்றத்துக்கு போனவர். இதேமாதிரி நாளைக்கு சம்மந்தனோ இல்லை சுரேஷ் பிரேமசந்திரனோ செய்யமாட்டார்கள் என்று நிச்சமாயாக சொல்லமுடியாது. அரசியல்வாதியோட நோக்கம் எல்லாம் பணம், பதவி, அதிகாரம்தான் இதற்காக எதுவேண்டுமானாலும் செய்வார்கள். ஹக்கீம், சம்மந்தன், ஆறுமுகம் தொண்டைமான், சந்திரசேகரன், ஹிஸ்புல்லா எல்லோருமே ஓரே குட்டையில் ஊறிய மட்டைதான்.
நல்ல அரசியல் தலைவர்கள் வராதது நம்ம தலைவிதி. இதற்காக ஜனநாயக முறையில் வாக்களிக்காமலும் விட முடியாது. அதை கள்ள ஓட்டா மாற்றி விடுவார்கள். அதனால உள்ள் கெட்டவர்களுக்குள் யார் குறைய கெட்டவர் என்று பார்த்து வாக்களிக்க வேண்டியது தான். எப்படி அதை கண்டுபிடிப்பது? இதை பத்தி ரொம்ப அலட்டிக்காதீங்க. உங்க கருத்துன்படி யார் பரவாயில்லை என்றூ தோணுதோ அவருக்கே வாக்கை போடுங்க. அதுக்கப்புறம் கடவுளே இவர் கொஞ்சம் நன்மையும் செய்யிறமாதிரி பாத்துக்கப்பா அப்பிடின்னு வேண்டிக்கலாம். இவ்வளவு தான் நாம செய்ய முடியும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

