03-02-2004, 09:51 AM
விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் தொடரும் என்ற கதிர்காமரின் கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்தால், தொடரும் பேச்சுவார்த்தைகள், விடுதலைப் புலிகளின் இடைக்கால நிர்வாகசபை யோசனைகளின் அடிப்படையில், விடுதலைப் புலிகளுடன் மட்டுமே தனியாக நடாத்தப்படும் என்று லக்ஷ்மன் கதிர்காமர் கொழும்புப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி, தற்போது சர்ச்சையைக் கிழப்பியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கியுள்ள ஈ.பி.டி.பி., ஆனந்தசங்கரி கட்சி ஆகியன உட்பட இதர முஸ்லிம் கட்சிகளும், சிறிய இடதுசாரிக் கட்சிகளும், சில பௌத்த அமைப்புக்களும், ஏனைய சிங்கள இனவாத அமைப்புக்களும் கதிர்காமரின் இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், இதற்கு ஐனாதிபதி சந்திரிகாவிடமிருந்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடாத்தியபோது, எதிர்க்கட்சியை இணைத்துக் கொள்ளாததனாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட நேர்ந்தது என்று ஐனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஐபக்ஷவும் தெரிவித்து வந்த காரணத்தை மறந்து, எதிர்க்கட்சியின் பிரதிநிதித்துவமின்றி, ஆளும்கட்சி விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்ற கதிர்காமரின் கருத்தும், மேலதிக சிக்கலையும் சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், தேர்தல் முடியும்வரை, இனவாதக் கருத்துக்களை மறைத்து, சமாதானம், பேச்சுவார்த்தை, புனரமைப்பு, மக்களாட்சி போன்றவை குறித்து அதிகமாகப் பிரச்சாரம் செய்யும்படி, தனது கூட்டணியின் அங்கத்தவர்கள் அனைவரையும் ஐனாதிபதி சந்திரிகா, கடுமையாகப் பணித்துள்ளதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் தமிழர் பிரதிநிதிகள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்
தமிழர் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சமான 'விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்" என்ற கருத்தைத் தான் நிராகரிப்பதாகவும், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் அல்ல என்பதை தனது தேர்தல் வெற்றியின் மூலம் நிரூபிக்கவுள்ளதாகவும் சவால் விடுத்துள்ளார் ஆனந்தசங்கரி.
விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்பதை யாழ். மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், இத்தேர்தலில் தன்னைத் தெரிவு செய்வதன் மூலம் இதை அவர்கள் தெளிவுபடுத்துவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாங்கள் வென்றால் இவர்களுடன் பேசமாட்டோம் என்பது கதிர்காமர் கருத்து
தான் வென்றால் தன்னோடும் பேசவேண்டும் இது சங்கரி
இதில் யார் சொல்வது சரி?
செய்திகள் புதினம் இணையம்

\" \"