03-01-2004, 07:13 PM
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் ஏட்டிக்கு போட்டியாக தேர்தல் பிரசாரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 14 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் 8 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்ற போதிலும் தமிழ் பிரதேசங்களில் இலங்கை தமிழரசுக்கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புவேட்பாளர்கள் ஏட்டிக்குப் போட்டி யாக பிரசாரங் களை மேற்கொண்டு வருகிறார்கள்.
படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் தாராளமாக நடமாடி பிரசார வேலைகளில் ஈடுபட்டு வரும் <span style='color:#ff0051'><b>தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களில் அநேகர் கொள்கைகளை வலியுறுத்துவதற்கு பதிலாக தனிப்பட்ட ரீதியில் ஆதரவு திரட்டுவதையே காணமுடிகிறது</b>.
தெருக்களில் வீட்டுச் சின்னமும், விருப்பு இலக்கமும் வேட்பாளர்களின் பெயர்களுமே காணப்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளை வலியுறுத்தி எந்த சுலோகங்களும் காணப்படவில்லை.
<b>சில வேட்பாளர்கள் தமது கட்சியின் சக வேட்பாளர்களை விமர்சித்து பிரசாரம் செய்வதாகவும் </b>நியமனப் பத்திர தினத்தன்று முக்கிய வேட்பாளர் ஒருவர் ஆதரவாளர்களை குஷிப்படுத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.
நியமனப் பத்திரம் தாக்கல் செய்து எட்டு தினங்களாகியும் தமிழ் தேசிய கூட்டமைப்போ வேறு தமிழ்க் கட்சிகளோ வேட்பாளர் அறிமுக கூட்டங்களையோ கருத்தரங்குகளையோ இதுவரை நடத்தவில்லை.இதேவேளை முஸ்லிம் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி என்பன பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் அநேகர் புதுமுகங்களாக இருப்பதால் தமது பிரதேசத்திற்கு வெளியில் பிரசித்தமானவர்களாக இல்லாததால் பரவலாக பிரசாரச் கூட்டங்களை நடத்த வேண்டுமென ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.</span>
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>