Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்......... நன்றி கி.பி
#10
அடடா குருவிகாள் என்ன ஒரு அக்கறை கம்பன் கழகத்தின் மீது
நானே கம்பன் கழகம் தேவையா என்று கருத்தெழுதுவதற்காக தரவுகளை சேகரித்து வந்த வேளையில் இந்தக் கட்டுரை யாழில் பிரசுரம் பண்ணப்படுகிறது
முற்போக்கு வாத சிந்தனைகளை அள்ளிவிடும் குருவிகாள் கம்பனுக்குக்காக கவிபாடுகிறார்

ஜெயராஜ் சொல்வதில் நிறைய உண்மைகள் இருக்கின்றன அவர் பொதுவாக ஒட்டுமொத்த புலம் பெயர் தமிழ்ச் சமுதாயத்தை நோக்கி விரலை நீட்டினாலும் அதில் குத்துப்படுவதற்கு நாம் நிறையத் தவறுகளைச் செய்து விட்டோம்
அது நிற்க
இவற்றை சுட்டிக் காட்டுவதற்கு ஜெயராஜ் இற்கு உரிமை உண்டா என்றால் உண்டு ஏனென்றால் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு தவறே செய்யாத ஒருவர் தான் வரவேண்டும் என்றில்லை

ஆனால் ஐயா ஜெயராஜ் செய்த தவறு எல்லம் கண்ணாடி வீட்டுகுள் இருந்து கல்லெறிந்ததுதான் அவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை நோக்கி விரல் நீட்டும் போது மிகுதி 4 விரலில் 3 விரல்கள் தன்னை நோக்கி மடிவதை கவனிக்கத் தவறி விட்டார்

சாதி ஒழிப்பு பற்றி பேசப்பட்டு வந்த காலகட்டத்தில் சாதி பற்றி பொது மேடைகளில் வருணம் பேசியதற்காக எச்சரிக்கப் பட்டார் அத்தோடு கொழும்பு ஓடியவர் தான் பின்னர் கவிக்கோ அப்துல் ரகுமானுடன் யாழ் வந்து சென்றதான சேதி தான் எம் காதில் விழுந்தது அதற்கு பிரதியுபகாரமாக கவிக்கோவும் தனது நரம்பு அறுந்த யாழ் தொடரில் ஆங்காங்கே அவரைப் பற்றியும் குறிப்பிட்டு படங்களையும் பிரசுரித்தார்

இப்போது குருவிகளாரின் கூற்றுக்கு வருவோம்
எத்தனையோ இடர்கள் மத்தியில் யாழ் மக்களுக்குச் சேவை செய்த கம்பன்கழகத்தினர் இல்லம் பிரபாகரன் வீடு என்று கருதப்பட்டதற்கும் காட்டப்பட்டதற்கும் காரணம் இல்லாமலில்லை வீடு அமைந்திருந்த விதமும் வசதிகளும் பகட்டுமே அவ்வாறு நினைக்கத் தூண்டின மக்களுக்கு சேவை செய்யும் மகேசன் அடியவருக்கு ஏன் இத்தனை பகட்டு
கம்பரசத்தில் தாம் திளைத்தது மட்டுமன்றி பிறரையும் திளைக்கவைத்த பெருமை தவிர இந்த பெரியவர் செய்த சேவையை சொல்ல முடியுமா?
கொழும்பு ஓடியவர் அங்கிருக்கும் சில பெரிய மனிதர்கள் தயவால் வீடு ஒன்றை வாங்கி அலுவலகம் அமைத்தார்களே அந்த வீட்டின் பெறுமதி அந்த நேரத்தில் 40 லட்சம் அந்தப்பணம் இவர் சொந்தமாக உழைத்ததா ?கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த மாதிரி வெளிநாட்டினரிடம் இருந்து பெற்ற பணத்தில் இவர் சமூகத்திற்கு செய்த சேவை எதையாவது உம்மால் பட்டியலிட முடியுமா
பெரும் எண்ணிக்கையில் உள்வாங்கிய இளையவர்களை வைத்து இவர்கள் செய்த சேவையை கூறமுடியுமா?

வெளிநாட்டுக்குப் போய்வந்தபின் புலம் பெயர்ந்தோர்களிடம் இருந்து கழகப் பெயரால் பெருமளவு அன்பளிப்புகளையும் பெற்றபின் இவர் இதனைக் கூறுவதிலும் பார்க்க தமிழர் கலாச்சாரம் வெளிநாட்டில் சீரழிக்கப் படுகிறது எனவே நான் அங்கு வரமாட்டேன் எனக் கூறி போகாமல் விட்டிருந்தால் இதனைச் சொல்வதற்கு முழுத் தகுதியும் கம்பவாரிதிக்கு இருந்திருக்கும்

இந்தப் பெரிய மனிதரின் சாதனையாக தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்களை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார் அதனைப் பார்த்தால் தெரியும் இவர் சமூகத்தில் யாரைத் திருப்திப்படுத்த முயன்றிருக்கின்றார் என்று
குருவிகாள் நீர் கம்ப வாரிதிக்கு வக்காலத்து வாங்கவில்லையெனில் உமது பதில் மூலம் யாருக்கு வக்காலத்து வாங்க விரும்பினீர் சொல்லமுடியுமா?
\" \"
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 02-29-2004, 10:58 AM
[No subject] - by Mathan - 02-29-2004, 11:48 AM
[No subject] - by Paranee - 02-29-2004, 12:39 PM
[No subject] - by thampu - 02-29-2004, 04:51 PM
[No subject] - by kuruvikal - 02-29-2004, 09:06 PM
[No subject] - by manimaran - 02-29-2004, 10:05 PM
[No subject] - by kuruvikal - 02-29-2004, 10:34 PM
[No subject] - by vasisutha - 02-29-2004, 10:41 PM
[No subject] - by Eelavan - 03-01-2004, 11:39 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)