03-01-2004, 11:14 AM
ஈராக் நிர்வாகத்தின் கீழ் உள்ள குர்திஷ் தேசிய இனத்தவர் பாக்தாத்தில் உள்ள ஈராக்கிய நிர்வாகிகளிடம் ஒரு மனு அளித்துள்ளனர்.
(துருக்கி, சிரியா, ஈரான், ஈராக், ஆர்மேனியா உள்ளிட்ட நாடுகளின் எல்லையோரங்களில் தனித்த தேசிய இன அடையாளத்தோடு வாழ்ந்த குர்திஷ் இனத்தவர் ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் நிர்வாக ரீதியாக சிதைக்கப்பட்டனர். இன்றளவும் அவர்களது தேசம் வரையறுக்கப்பட்ட தேசமாகத்தான் இருக்கிறது. நிர்வாகங்கள் வேறாக இருந்தாலும் குர்திஸ்தான் விடுதலை தாகம் அடங்கவில்லை. அவர்களது ஒப்பற்ற தலைவராக கருதப்பட்ட ஒகாலன் சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்னமும் அவர் சிறையில்தான் வாடிவருகிறார்)
1.7 மில்லியன் குர்திஷ் தேசிய இனத்தவர் கையெழுத்திட்டுள்ள அம்மனுவில் வலியுறுத்தப்பட்ட விடயம் இதுதான்:
'ஈராக் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் குர்திஷ் இன மக்கள் வாழும் பகுதி, ஈராக்குடன் இணைந்திருப்பதா? தனியரசை உருவாக்கிக் கொள்வதா? என்பது குறித்து குர்திஷ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான்.
வாக்கெடுப்புக்கான இயக்கம் ஒரே ஒரு இலக்கைத்தான் மையப்படுத்தி உள்ளது.
ஈராக்கில் உள்ள குர்திஷ் தேசிய இனத்தவர் தங்களது எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே அதன் ஒற்றை இலக்கு.
முதலாம் உலகப் போருக்குப் பின் இங்கிலாந்தின் பேராதிக்கத்திலிருந்து ஈராக் விடுவிக்கப்பட்ட போது குர்திஷ் இன மக்களை கலந்தாலோசிக்காமலேயே குர்திஷ் தேசிய இன மக்கள் வசித்த பகுதிகள் ஈராக்குடன் இணைக்கப்பட்டுவிட்டன.
கடந்த அரை நு}ற்றாண்டுக்கும் மேலாக இந்த கட்டாய இணைப்பினால் குர்திஷ் தேசிய இனத்தவர் அனுபவித்த இன்னல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கும் இனியும் தீர்வு காணாமல் இருக்க முடியாது என்பதே குர்திஷ் இனத்தவரின் இப்போதைய தாகமாக வலுப்பட்டுள்ளது.
அரேபிய பெரும்பான்மையினரிலிருந்து தனித்த தேசிய இன அடையாளத்தோடு செறிவான பகுதிகளில் பாரம்பரிய தாயக வாழ்விடத்தில் வாழும் குர்திஷ் இன மக்கள் சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ள சுயநிர்ணய உரிமைக்கான முன் நிலையான மக்கள் வாக்கெடுப்பைக் கோருகின்றனர்.
ஈராக் ஆட்சிப் பொறுப்பிலிருந்த சதாம் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு அநீதியானது என்ற ஆதங்கம் நம்மிடம் இருந்தாலும் குர்திஷ் தேசிய இனத்தின் மீதான சதாமின் ஒடுக்குமுறையை நாம் ஒருபோதும் அங்கீகரித்துவிடமுடியாது.
காலம் மாறியுள்ளன. காட்சிகளும் மாறிவிட்டன. அறுவடைதான் பாக்கி அல்லவா?
அதனால்தான், 'எமது தேசத்தை விடுதலை தேசமாக பார்க்க விரும்புகிறேன். எமது சொந்த அரசை நாங்கள் பெற்றிருக்க விரும்புகிறோம்; எம் மண்ணில் எமது தாயகக் கொடி பறக்க வேண்டும். ஈராக் வேறு - குர்திஸ்தான் வேறு; குர்திஸ்தான் ஒரு தனியரசு" என்று முழங்குகிறார் ஈராக் நிர்வாகத்தில் உள்ள குர்திஷ் இனத்தவரான ஒஸ்மன் காதர் என்பவர்.
எமது விடுதலை கனவு நு}ற்றாண்டுகால கனவு இது விடுதலைக்கான நு}ற்றாண்டு. இது விடுதலைக்கான காலம். இது குர்திசுகளின் நு}ற்றாண்டு" என்கிறார் குர்திஷ் ஓவியரான கமால் எக்கான். இந்த வாக்கெடுப்பின் தொடக்கம் இப்போதாக இருக்கலாம். மேலும் 5 ஆண்டுகள் என்ன 6,10 ஆண்டுகள் கூட ஆகட்டும். இறுதியில் குர்திஸ்தான் விடுதலை பெற்ற தனியரசாக மலரத்தான் போகிறது என்கிறார் நம்பிக்கை தெரியும் விழிகளுடன்.
ஆனால் காலம் தேசபக்தர்களைப் படைத்தது போலவே தேசத் துரோகிகளையும் பதவி பித்தர்களையும் அல்லவா உருவாக்கிவிட்டு வருகிறது.
இந்த வாக்கெடுப்பு கோரிக்கையை மக்கள் ஏற்கவே மாட்டார்கள் என்று ஈராக் நிர்வாகத்தின் கீழான குர்திஷ் பகுதியின் பிரதமராக உள்ள பர்காம் தெரிவித்து வருகிறார்.
இந்த விடுதலை முழக்கம், ஈரான் மற்றும் துருக்கியின் இராணுவத் தலையீட்டு வழிவகுத்துவிடும் என்கிறார் அவர். ஈராக் கூட்டரசுடன் நல்லுறவுப் போக்கையே வளர்க்க வேண்டும் என்று புதிய தத்துவம் பேசுகிறார் அவர். தங்களது தற்காலிக தலைமைத்துவத்துக்கு வேட்டு வைத்துவிடும் இந்த வாக்கெடுப்பு கோரிக்கையை இவர்கள் ஏற்பார்களா என்ன?
ஆனால் மக்கள் யார் பக்கம் என்பதை.. மக்கள் எந்த கோரிக்கையை ஆதரிக்கிறார் என்பதை எப்படி அறிவது.? சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ள வாக்கெடுப்பு முறையை உடனேயே குர்திஷ் தேசிய இன மக்களிடம் நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட மக்களின் அடங்காத முழக்கமாக இருக்கும்.
நன்றி: பி.பி.சி இணையத்தளம்
மொழிபெயர்ப்பு உதவி: சேரமான்