03-01-2004, 10:45 AM
<b>புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்த முறையும் வாக்குப்பதிவு இல்லை</b>
<b>தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவிப்பு</b>
வட, கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாக்குப்பதிவு இடம்பெறாதென தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் பின்பற்றப்பட்ட நடைமுறையைப் போன்று ஏப்ரல் - 2 தேர்தலிலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்குப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வந்து பொது மக்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுமென அவர் கூறினார்.
யுத்த சூனியப் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் மாத்திரம் அங்கு வாக்குப் பதிவை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுமென்று திசாநாயக்க கூறினார்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் அரச படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்து கொத்தணி வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்குகளைப் பதிவு செய்ய மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஒழுங்குகளை செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேர்தல் திணைக்களம் தேர்தல் சட்ட விதிகளுக்கு அமைய தன்வசமிருக்கும் சகல வசதிகளையும், வளங்களையும் கொண்டு தேர்தலை நீதியாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
நியாயமான தேர்தலை உறுதிப்படுத்த சர்வதேச மற்றும் உள்@ ர் கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்பு பெறப்படும். சட்ட மீறல்கள் இடம்பெறாமல் இருக்க அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பது அவசியம்.
வன்செயல்கள், மோசடிகள் இடம்பெறாமல் தடுப்பதற்கு பொலிஸார், படையினரின் உதவிகள் பெறப்படும்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களில் பொது விதிமுறைகளுக்கமைய தேர்தல்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால், மாற்று வழிகளைச் கையாள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தென்பகுதியைவிட, வடக்கு, கிழக்குப் பதிகளில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அப்பகுதி மக்களின் வாக்குரிமை தொடர்பாகவும், அவற்றுக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவம் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
அரசாங்கமும், புலிகளும் கைச்சாத்திட்டிருக்கும் போர்நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் படையினர் சீருடை, ஆயுதங்களுடன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லமுடியாது.
அதேபோன்று, புலிகளும் அரச படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் சீருடை, ஆயுதங்களுடன் பிரவேசிக்க முடியாது. இதன் காரணமாகவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தேர்தலை நடத்தி, அதற்குப் பாதுகாப்புக் கொடுக்க முடியாத இக்கட்டான நிலைமைக்கு தேர்தல் திணைக்களம் தள்ளப்பட்டுள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் ஒரே நேரத்தில் தேர்தல் இடம்பெறவேண்டியிருப்பதால், மாற்று வழியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் மக்கள், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்து வாக்களித்துவிட்டு செல்லுமாறு கோரப்பட்டுள்ளனர்.
இந்த நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் பாரதூரமான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட இடங்களுக்குப் பொறுப்பான தெரிவத்தாட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆணையாளர் கூறினார்.
நன்றி- தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>