03-01-2004, 10:03 AM
இலங்கை: ரணில் கட்சியின் தமிழ் வேட்பாளர் சுட்டுக் கொலை
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ரணிலின் அரசை அதிபர் சந்திரிகா கலைத்ததையடுத்து வரும் ஏப்ரல் 2ம் தேதி இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் சந்திரிகா கைகோர்த்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கே மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது கட்சியின் சார்பில் பட்டிகலூவாவில் தமிழரான சின்னதம்பி சுந்தரபிள்ளை நிறுத்தப்பட்டிருந்தார்.
இந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சுந்தரபிள்ளையை கடந்த சனிக்கிழமை சிலர் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் பட்டிகலூவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந் நிலையில் அவரை இன்று இருவர் மருத்துவமனையில் வைத்தே சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிவிட்டனர்.
சிங்கள கட்சிகளின் சார்பில் தமிழர்கள் யாரும் போட்டியிட வேண்டாம் என்று புலிகள் ஆதரவு அமைப்புகளின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் புலிகள் தான் அவரைக் கொன்றதாக சந்திரிகாவின் கட்சியினர் புகார் கூறியுள்ளனர்.
ஆனால், இதைச் செய்தது யார் என்பது குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது என ரணில் அரசில் அமைச்சராக இருந்தவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவருமான ஜி.எல்.பெரிஸ் கூறியுள்ளார். போலீஸ் விசாரணைக்குப் பின்னரே எதுவும் கூற முடியும் என்றார்.
Thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>