03-01-2004, 01:58 AM
Eelavan Wrote:....
இவற்றினை விட ஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்து நிகழ்வுகளை மையப்படுத்தி பாமினி செல்லத்துரை என்னும் அவுஸ்திரேலியவிலுள்ள இலங்கைப் பெண்மணி எழுதிய சிதறிய சித்தார்த்தன் என்னும் நாவல் வாசிக்கப்பெற்றேன் நூலில் தகவல் கனம் குறைவு எனினும் பரவாயில்ல.
அந்த புத்தகம் இன்னும் நான் படிக்கவில்லை
பயனுள்ள அந்த தகவலுக்கு மிக்க நன்றிகள் ஈழவன்.
அடுத்து...........
'முறிந்த பனை' பற்றி மீள நினைப்பது கால நதியோராம் நாம் தவிர்க்கக்கூடாது என்பதைவிட தவிர்க்கமுடியாததும். இது ஈழ போராட்டத்தை ஆவணமயப்படுத்த முயன்ற முதல் புத்தகம். யாழ் பல்கலைக்கழக பின்ணணியை கொண்ட நால்வர் அதன் ஆசிரியர் பீடத்தில் இருந்து இலங்கை வரலாற்றுப் பின்புலத்தில் ஈழ போராட்டதின் நாடி பிடித்து பார்த்தது வெறும் கலாநிதி பட்டம் எடுப்பதற்கு அல்ல. இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை புலிகளின் பிரச்சார வலைவினையம் வெளிக்கொண்டுவர தட்டுத்தடுமாறி போயிருந்த காலம் - முறிந்த பனை அவற்றை ஒரளவு முழுமையாகவும் இம்மியளவு மிகைப்படுத்தாமலும் பதிவு செய்தது.
ஆனால் புத்தகத்தின் நீண்ட அத்தியாயங்கள் ஈழ போராட்டத்தின் ஆணி வேர்வரை தேடிப்பிடித்து அலசி எடுக்கிறது. புலிகள் மட்டுமல்ல மற்றைய ஈழ போராட்ட அமைப்புகளும் அவர்களால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டன.
மக்கள் தமது குரலை இழந்து வருவது குறித்து தீவிர கரிசனை கொள்ளும் அவர்களின் புத்தகம் வெளிவந்து சில மாதங்களுக்குள் ஆசிரியர் குழுவில் ஒருவரான ராஜினி திரனகம தனது வீட்டிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு சயிக்கிலில் செல்லும் போது வழமைபோல் இனம்தெரியாத இளைஞர்களால் சுட்டுக்கொல்லப்படுகிறார்.
இங்கிலாந்தில் வைத்தியத்துறை மேற்படிப்பை முடித்த கையுடன் தனது மண்ணில் கால் பதித்து அந்த மண்ணின் மாணவர்களுக்கு கல்வி போதிக்கபோன ராஜினி யாழ் சமூகத்தை இவ்வாறுதான் இனம் காட்டினார் மாட்டின் லூதகிங் போல
<img src='http://www.angelfire.com/ab7/thampu/martin.GIF' border='0' alt='user posted image'>
<b>
கொடியவர்களின் ஈனச் செயலுக்காக அல்ல, நல்லவர்களின் கொடூரமான மௌனத்திற்காகத்தான் நாங்கள் இந்த தலைமுறையில் வருந்தவேண்டி இருக்கிறது.</b>
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell

