02-29-2004, 11:32 PM
<span style='font-size:25pt;line-height:100%'>ஆட்டோகிராப் - திரை விமர்சனம்</span>
<img src='http://www.tamilcinema.com/cinenews/review/2004/auto1.jpg' border='0' alt='user posted image'>
இளமையில் கல்! இது சாத்தியமோ, இல்லையோ, இளமையில் காதல்... -இது சத்தியம்! இப்படி ஒவ்வொருத்தன் வாழ்க்கையிலும் தொலைந்து போன காதல் சொர்க்கத்தை மீட்டெடுத்து கொடுத்திருக்கிறார் சேரன். மனசின் அடியில் மூழ்கிக்கிடக்கும் காதல் கல் வெட்டுகளை தன் மாயக்கரங்களால் தடவி தடவி படித்திருக்கிறார்! அடேயப்பா... சிலிர்த்துக் கொள்கிறது ஒவ்வொரு மயிற்கால்களும்!
பட்டிணத்தில் வேலை பார்க்கும் சேரனுக்கு திருமணம். தன் வாழ்க்கையில் கடந்து போன முக்கியமான மனிதர்களுக்கு பத்திரிகை கொடுக்க புறப்படுகிறார். அந்த முக்கியமானவர்களில் மனசை கிள்ளிய மல்லிகாவையும், கோபிகாவையும், சந்திக்கிறார். சந்திப்பு நிகழும் அந்த நிமிடமும், அதற்கு முந்தைய பிளாஷ்பேக்குகள் இரண்டும் கிழட்டு இதயங்களையும், இன்னொரு முறை
காதல் பதியம் போட வைக்கும்! நதியாய் நடந்து, தென்றலாய் தழுவி, கனலாய் கொதித்து, கவிதையாய் இனித்திருக்கிறார் சேரன். ஹீரோவும் அவரே! இயக்குனரும் அவரே! இந்த வெவ்வேறு தளங்களில் சேரனின் பங்கு ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.
அந்த ஸ்கூல் லவ் எல்லாருக்கும் வாய்த்திருக்க கூடிய இனிய அனுபவம்தான். மல்லிகாவுடனான விடலை காதலில் சொக்கிப்போய், ''ஹேப்பி வயசுக்கு வந்த டே'' என்று சொல்லி மல்லிகாவுக்கு பூங்கொத்து வழங்கும் குட்டி சேரனின் குறும்பை ரொம்பவே ரசிக்கலாம். மல்லிகாவின் நினைவாக அவளின் கூந்தல் குஞ்சத்தை வெட்டி எடுத்து பாதுகாக்கிறாரே... அது, காதலிக்கிற சிறுசுகளின் கண்ணியத்திற்குரிய மியூசியம்.
மல்லிகா, தமிழுக்கு கிடைத்த தங்க பொக்கிஷம். என்னவொரு தேர்ந்த நடிப்பு! தனக்கு கல்யாண பத்திரிகை கொடுக்க வரும் சேரனை அடையாளம் தெரியாமல் நெற்றிச்சுருக்கும் அந்த கணமும், பிறகு தெரிந்தவுடன் ''வா செந்திலு...'' என்று வாய்நிறைய மகிழ்வதும் சில்லிப்பு.... சிலிர்ப்பு! மணமேடையில் மனசுக்குள் பொத்தி வைத்த காதலின் வேகத்தில் திரும்பி பார்த்துவிட்டு போகிறாரே...விசில் பறக்கிறது தியேட்டரில்!
இதுதான் இப்படி என்றால் கேரள கரையோரம் மனசை தொலைத்துவிட்டு சேரன் சுமந்த பாரம் இருக்கிறதே, நத்தையின் முதுகில் இமயம்! டவுண் பஸ் கணக்காக படகில் சவாரி செய்யும் மாணவர் கூட்டத்தில் தமிழனை இழிவு படுத்தியவர்களை தண்ணிக்குள்ளேயே புரட்டியெடுக்கும் காட்சி, சேரனின் இனப்பற்றுக்கு சாட்சி!
அங்கே கோபிகாவுடன் காதல்! முந்தைய காதலைவிட, சற்றே மெச்சுரிடியான காதல் இது. வீணை கற்றுக் கொள்ளும் சேரனின் விருப்பத்திற்கு கோபிகா வளைந்து கொடுக்க, சேரனின் தமிழும் சேர்ந்து வளைந்து கொடுத்து மலையாளத்திற்கு மாறுவது அழகு. வீட்டில் நாலைந்து யானைகளை வளர்க்கிற அளவிற்கு கம்பீரமான கோபிகாவின் வீடு காலமாற்றத்தில், நான்கைந்து கன்றுக்குட்டிகள் மட்டுமே வளர்க்கும் நிலைக்கு போயிருப்பதையும், உள்ளே கோபிகாவின் நிலையும் அதுதான் என்பதையும் அழகாக முடிச்சு போட்டிருக்கிறார் சேரன். சேரனுக்கு மூக்குத்தி பிடிக்கும் என்பதற்காக தானே மூக்கை பஞ்சராக்கிக் கொள்ளும் கோபிகாவின் காதல் பித்து, சேரனுக்கு மட்டுமல்ல, ரசிகனுக்கும் வலியேற்படுத்தும். கோபிகா கொடுக்கிற ஆப்பிளை வாங்கி கடித்து, கற்பனையில் இருவரும் ஆதாம், ஏவாளாக மாறிவிடும் காதல் காட்சியில் ரசனை அதிகம்!
சேரனின் வாழ்க்கையில் வரும் அந்த மூன்றாவது பெண்ணான சினேகாவின் பகுதி மட்டும் விக்ரமன் படம் போல் இருக்கிறது. இருவரின் நட்பையும் கொச்சைப்படுத்தாமல் காட்டியிருப்பது ஆரோக்கியம்! பார்வையற்றவர்களின் இசை நிகழ்ச்சியில் சினேகா பாடும் அந்த பாடல், குளுக்கோஸ்!
சில காட்சிகளே வந்தாலும் கனிஹாவும் நெஞ்சையள்ளிக் கொண்டு போகிறார். கடைசியில், சேரனுக்கு விதிக்கப்பட்டவர் இவரே! சேரனின் காதல்கள் ஏதும் தெரியாத அப்பாவி!
மனசில் பச்சை குத்திய இந்த நான்கு பெண்களையும் சேரனையும் விடுங்கள்... கிராமத்து வாத்தியார் இளவரசுவின் அத்தனை அசைவையும் மூக்கை பிடித்துக் கொண்டு ரசிக்கலாம்! ஆனாலும் சேரன்...இது ரொம்ப அநியாயம்!
எஸ்.ரவிவர்மன், விஜய்மில்டன், துவாரகநாத், ஷங்கிமகேந்திரா! -சேரனின் காதல்களை சேதாரமில்லாமல் சேகரித்த ஒளிப்பதிவாளர்கள் இவர்கள்தான். அந்தந்த காலத்திற்கே நம்மை அழைத்துப்போன கால யந்திரங்கள்! இந்த பிரம்மாக்கள் வரிசையில் ஆர்ட் டைரக்டர் மணிராஜுக்கும் அசைக்க முடியாத இடம் உண்டு.
கதையின் வேகத்தில் பிற்பாதி திணறினாலும், இந்த ஆட்டோகிராப், சேரனின் கிராஃபை தாறுமாறாக உயர்த்தப்போவது மட்டும் நிச்சயம்!
நன்றி - தமிழ் சினிமா

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>