02-29-2004, 10:05 PM
கம்பனால் எழுதப்பட்ட கற்பனைகளுக்கு 'கம்பவாரிதி' மேலும் கவிதாரசம் புூசி இன்னொரு காவியம் ஆக்கினால் கூட நாம் அதனைக் கண்டு கொள்ளத்தேவையில்லை. ஆனால் இப்போது அவர் தனது கற்பனை நயத்தை அகதித் தமிழனிலும் பிரயோகிக்க முனைந்திருக்கின்றார்.
உண்மையில் ஒருஇனத்தில் அக்கறை கொண்டு அதற்காக உழைத்து ஒருவர் அந்தமக்கள் கூட்டம் சரியான பாதையைவிட்டு விலகி செல்லும்போது அதற்கு ஆலோசனை சொல்வதும் அந்த மக்களை நல்வழிப்படுத்த முயல்வதும் நிச்சயமாக போற்றுதலுக்குரிய விடயமே. ஆனால் ஒரு இனம் பசியாலும் பஞ்சத்தாலும் பரிதவித்து கதறித்துடித்தபோதோ அந்த மக்கள் கூட்டமே முழுதுமாக துடைத்தெறியப்படுகின்ற நிலைதோன்றி அவர்கள் தங்கள் இருப்புக்காக நெருப்பினுள் குழித்தபோதோ அந்த மக்களுடன் இருந்து அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு பக்கபலமாக இருந்து அவர்கள் கரத்தை, கருத்தை பலப்படுத்த வல்லமையிருந்தும் அதனைப் பயன்படுத்தாது எங்கோ ஓடி ஒழித்தவர் இன்று அவர்களின் நலன்பற்றி 'அக்கறை' கொள்வது விசித்திரமே.
கருத்துக்களை யாரும் சொல்லிவிட்டுப்போகலாம். ஆனால் அதைச் சொல்பவர் நிச்சயமாக அதற்கு தகுதியுடையவராயிருக்க வேண்டும். அந்த தகுதி ஜெயராச்சிற்கு இருப்பதாக நான் நிச்சயமாக நம்பவில்லை.