Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்......... நன்றி கி.பி
#6
ஜெயராஜ் சொன்னதில் உள்ள நாகரிகம் கூட இதில் இல்லை....! அதையும் தெரிஞ்சுகோங்க....!

இலக்கியங்கள் ஒன்றும் இலட்சிய மனிதர்களுக்காக படைக்கப்படவில்லை....இலக்கியங்கள் மக்களுக்காக படைக்கப்பட்டவை....மக்களில் பலரும் பலவற்றை விரும்புவர்...அவரவர்களுக்கு ஏற்றமாதிரி இலக்கியத்தில் பல சுவை சேர்த்து படைக்க வேண்டியது படைப்பாளியின் கடமை....அதற்காக படைப்பாளியை ஒரேயடியாக கெட்டவன் என்று சொல்ல முடியுமா...????!
கண்ணதாசன் ஒரு உதவாக்கரை...ஆனால் அவருடைய படைப்புக்களை ஆளுக்கொருமாதிரி நுகர்கிறீர்களே...அதெப்படி.....???!

கம்பவாரிதியிடம் விளக்கம் கேட்டால் வாரிதி தான் எழுதியதற்கு நீங்கள் எதிர்பார்க்கும் அல்லது மேலே எழுதிய கட்டுரையாளர் எதிர்பார்க்கும் நாகரிகமான பதிலைத் தரக்கூடும்...உண்மையில் ஒரு கருத்தின் மீதான தனிப்பட்ட ஒவ்வொருவரின் பார்வைகளும் மாறலாம்....அதற்காக கம்பராமாயணம் எழுதிய கம்பரோ....நளவெண்பா எழுதிய புகழேந்தியோ...காமத்துப்பால் எழுதிய வள்ளுவனே...வம்பர்கள் என்று நாம் தீர்மானிக்க முடியாது...! அவர்கள் வம்பர்களாக மனிதரில் இப்படிச் சிந்திக்கும் வம்புப் பிறவிகளும் இருப்பதுதான் காரணமோ என்னவோ....???! :wink:

என்னதான் சொன்னாலும்... வாரிதி எழுதியது பலரை சிந்திக்கத் தூண்டும் ஒரு குரலாகக் கொள்ளத்தக்கதே...! அதில் பல யதார்த்த நிலைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன...அதை நாமே தரிசிக்கும் பொழுது அதில் கோபப்பட என்ன இருக்கிறது....! கோபத்துக்குமேலால் கொஞ்சம் சொல்லப்பட்ட கருத்தின் நோக்கத்தைச் சிந்திப்பது கூடிய பயனளிக்கும் என்றே நாம் நம்புகிறோம்....! :!:

வாருதி
நீ எமக்கு வம்பனல்ல
அதற்காய்
நாம் உனக்கு வாலுமல்ல....!
நாம் கருத்தை ஆதரிக்கிறோம்
காரணம்
அதுவே நிஜமாயும் உள்ளதால்...!
நீ நிஜத்தைத் தொட்டதால்
சீற்றம் பொங்குகிறது.....!
வம்பர்கள் கண்ணில் காண்பதெல்லாம்
வம்பே...!
காலம் சொல்லும் பதில்...!
நீ அடங்கிவிடாதே
துணிந்து நில்
தொடர்ந்து சொல் உன் நியாயங்களை....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 02-29-2004, 10:58 AM
[No subject] - by Mathan - 02-29-2004, 11:48 AM
[No subject] - by Paranee - 02-29-2004, 12:39 PM
[No subject] - by thampu - 02-29-2004, 04:51 PM
[No subject] - by kuruvikal - 02-29-2004, 09:06 PM
[No subject] - by manimaran - 02-29-2004, 10:05 PM
[No subject] - by kuruvikal - 02-29-2004, 10:34 PM
[No subject] - by vasisutha - 02-29-2004, 10:41 PM
[No subject] - by Eelavan - 03-01-2004, 11:39 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)