02-29-2004, 10:56 AM
புலிகள் பிரதேசத்தில் தேர்தல்
வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசுடனும், சம்பந்தப்பட்ட தரப்புடனும் பேசி, அடுத்த ஓரிரு நாட்களில் இது தொடர்பான முடிவை அறிவிப்பதாக, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ரொன்ட் பிய10று ஹொவ்டே விடுதலைப்புலிகளிடம் உறுதியளித்துள்ளார்.
கண்காணிப்புக் குழுவின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் நேற்றுச் சனிக்கிழமை முதல் தடவையாக கிளிநொச்சிக்குச் சென்ற ஜெனரல் பிய10று ஹொவ்டே, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசினார்.
முற்பகல் 11 மணியளவில் கிளிநொச்சியிலுள்ள அரசியல் நடுவப் பணியகத்தில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு நண்பகல் 12.30 மணிவரை நீடி த்தது.
இதன் போது போர் நிறுத்த உடன்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை இதனை வெகுவாகப் பாதிக்கக் கூ டியது என்பதால் இதனை அமுல்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.
இதைவிட விசேடமாக பொதுத் தேர்தலில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இம்முறை வாக்களிப்பது தொடர்பான நடைமுறை ஒழுங்கு குறித்து விடுதலைப்புலிகள் சில பிரேரணைகளை ஜெனரல் பிய10று ஹொவ்டேயிடம், சமர்ப்பித்தனர்.
அத்துடன், சரியான முறையில் தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஒழுங்குகளைச், செய்து கொடுக்க வேண்டி யதன் அவசியம் குறித்தும் தமிழ்ச்செல்வன் விளக்கமளித்தார்.
போர் நிறுத்த உடன்பாட்டில் இரானுவமும், விடுதலைப் புலிகளும் சம்பந்தப்பட்டுள்ளதால் கண்காணிப்புக் குழுவினரே சில நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி மக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும் புலிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போர் நிறுத்த உடன்பாட்டுக்கு அமைய புலிகளின், கட்டுப்பாட்டுப் பகுதியில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்கவும் புலிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவை தொடர்பாக புலிகள் சமர்ப்பித்த பிரேரணையுடன் அரச தரப்பினரையும் சம்பந்தப்பட்ட தரப்புகளையும் சந்தித்து, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அடுத்த ஓரிரு தினங்களில் பதில் தரப்படுமெனவும் ஜெனரல் பிய10று ஹொவ்டே தமிழ்ச்செல்வனுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், கடந்த தேர்தல்களில் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதி வாக்காளர்கள், இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் இம்முறை நடைபெறக் கூடாதெனவும் தமிழ்ச்செல்வன் கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளார்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>