02-28-2004, 09:06 PM
வழுதி Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>தமிழரின் அடையாளத்துவம் (Identity)</span>
எந்தவொரு சமூகத்திற்கும் தனித்துவம் அல்லது அடையாளத்துவம் அவசியமானதொன்று. இன்று புலம்பெயர் வாழ்வியலில் எமது தனித்துவம் எது என்பது பல்வேறுபட்ட வாதங்களுக்கு உட்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் நிகழ்ந்துவரும் கத்திக்குத்து கலாச்சாரம், மூலைக்கொரு கோவில் என்று சிலர் தங்களின் படாடோபங்களை பிறர்க்கு வெளிக்காட்டுவதாய் அமைகின்ற திருவிழாக்கள், ஆங்காங்கே "ஒன்றுகூடல்" என்ற போர்வையில் நிகழ்த்தப்படுகின்ற மேலைத்தேய பாணியிலான களியாட்ட விழாக்கள்..... இப்படி இன்னும் பல உண்டு. ( இன்னும் எழுதினால் அவை மேலும் சர்ச்சைகளுக்கே வித்திட்டுவிடும் என்பதில் ஐயமில்லை) இவையெல்லாம் இந்த தனித்துவத்தில் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதுவும் ஒரு கேள்விக்குறியே!
ஆகவே எது நமது தனித்துவம்? அது பற்றிய வரையறை என்ன? என்பவை அலசி ஆராயப்பட வேண்டிய விடயமேயாம். எனவே தங்களின் ஆக்கபூர்வ கருத்துக்களை முன்வையுங்கள்......
நன்றி.
வழுதி/-
வழுதி உங்களோட கேள்வி ரொம்ப நல்ல கேள்வி. நிறைய கருத்து இதுல விவாதிக்க இருக்கு. என்னை கேட்டீங்கன்னா காலத்துக்கு ஏத்த மாற்றம் அவசியமுன்னு சொல்லுவேன். அதனால மற்ற கலாசாரத்துல இருக்கிற நல்ல கருத்துகளையும் நா எடுத்துக்கிட்டிருக்கேன். இப்பிடி நானா பல கலாசாரத்தோட கலப்பா இருந்துகிட்ட தனித்துவம் பேச முடியாது. அதனாலை தனித்துவத்தையும் வரையறையையும் பத்தி மத்த யாழ் நண்பர்களோட கருத்தை எதிர்பாக்கிறேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

