02-28-2004, 07:53 AM
BBC Wrote:Eelavan Wrote:எனக்கு ஒரு சந்தேகம் B.B.C இப்போது நிலை மாறி வருகிறது B.B.C எமது குடும்பக் கட்டமைப்புகளில் ஆண் பெயருக்கு குடும்பத் தலைவனாகவும் உழைத்து வருபவனாகவும் மட்டுமே மாறி வருகின்றான் குடும்ப நிர்வாகம் முதல் எதையும் தீர்மானிக்கும்,முடிவெடுக்கும் அதிகாரம் குடும்பத்தலைவிகள் கையில் சென்று விட்டதாகத் தெரிகிறது அப்படியிருந்தும் ஆண்கள் சம உரிமை கேட்டுப் போராடவில்லையே என்ன காரணம் எங்கோ அடிப்படையில் தவறு இருபதாகத் தோன்றவில்லை
இப்போ ஆண், பெண் இரண்டு பேரும் சம்பாதிக்கிறாங்க. அதோடு குடும்ப கட்டமைப்பு மாறி வருது என்றதும் உண்மை தான். ஆனா இது எத்ததனை வீதம்? இந்த மாற்றங்கள் நல்ல/கெட்ட இரண்டு விதமான் விளைவையும் உருவாக்குது. யாரும் யாரையும் அடக்கி வாழக்கூடாது. அது பெண்ணை ஆண் அடக்கினாலும் இல்லை ஆணை பெண் அடக்கினாலும் இரண்டுமே தப்புதான். ஒருத்தர் மேல ஒருத்தர் அன்புதான் செலுத்தணும். அதிகாரம் செலுத்தக்கூடாது. இன்னைக்கு பெண்ணடிமைதனம் அதிகமா இருக்கிறதால அதை பத்தி பேசுறோம் அவ்வளவுதான்.
நண்பா
நாம் எமக்கு என்னென்ன உரிமை வேண்டும் என நினைக்கின்றோமோ அதைனையே மற்றவர்களுக்கும் நிச்சயம் கொடுத்தல் வேண்டும்
பெண்ணடிமை ஒரு காலத்தில் கொடுமையாக இருந்ததுதான் காலப்போக்கில் ஆணும் பெண்ணும் சரி சமனாக சகல துறைகளிலும் காலூன்றியவுடன் அழிந்து போகத்தொடங்கி இன்று காணாமற் போகும் அளவில் வந்து விட்டது ஆனால் நாம் பகுத்தறிவு சிந்தனைகள் எழும் இடங்களிலெல்லாம் பெண்ணடிமை ஒழிப்பு பற்றி பேசி அந்தக் காலகட்டத்தை நினைவூட்டி காழ்ப்புணர்ச்சியை வளர்க்கின்றோமோ என்று தோன்றுகின்றது
\" \"

