02-27-2004, 12:26 AM
ஒரு இளைஞன் தன் மரணத்திற்குப் பின் சொர்க்க வாசல் அருகே சென்றான். தனக்கு முன் இருவர் நின்றிருந்தனர். அப்போது சொர்க்கத்திற்குள் ஆட்களை அனுப்பும் புனித பீட்டர் தன் வேலையை ஒரு தேவதையிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். அந்த தேவதை மிகச் சரியாக தன் வேலையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டு அவர்களின் பதில் அடிப்படையில் இறந்தவர்களை சொர்க்கத்தினுள் அனுப்பியது. அவர்களிடம் "நீங்கள் பூமியில் என்ன வேலை பார்த்தீர்கள். உங்கள் மாத சம்பளம் என்ன' என்று கேட்டு பதிலை எதிர்பார்த்தது.
முதலாமவன் "நான் ஒரு சினிமா நடிகன். மாதத்தில் ரூ. 20 லட்சம் சம்பாதித்தேன்.' என்றான். அவனை தேவதை வெளியே அனுப்பியது. அடுத்து நின்றவன் "நான் மாதம் ரூ. 10 லட்சம் சம்பாதித்தேன்' என்றவனிடம் அந்த தேவதை "ஓ வக்கீலா ! நீயும் உள்ளே வராதே' என்றது. அடுத்து நின்ற இளைஞன் "நான் ஓராண்டில் ரூ. 50 ஆயிரம் தான் சம்பாதித்தேன்' என்றவுடன் "ஓ அப்படியா வாத்தியார் வேலை பார்த்தாயா. அப்படியானால் உள்ளே போ' என்றது.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>