02-26-2004, 11:34 PM
தொடர்ந்து பாலசிங்கத்தின் விடுதலை பற்றி..............
மாக்ஸ்சின் மூலவர்களான ஜேமனிய தத்துவ மேதை கெகல் பற்றியெல்லாம் நிறைய பேசும் பாலா பயபாக்கை ஏன் தவறவிட்டார் என்று தெரியவில்லை?..
அரிஸ்ரோட்டிலில் இருந்து நோம் சோம்ஸ்கி வரை சிலாகிக்கும் விடுதலையில் பாலாவின் அரசியல் பார்வை தான் தேர்ந்தெடுத்த அரசியல் பாதையுடன் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் போவது எமக்கு ஒன்றும் ஆச்சரியத்தை தரவில்லை. பாலாவின் தத்துவ தேடல் மிக நீண்டது.
விடுதலையின் முதல் அத்தியாயம் வாசகர்களின் அனைத்து மட்டத்துக்கும் எழுதியதுபோல் தொடரும் அத்தியாயங்கல் இல்லை. எம்ஜியாருடன் புலிகளுக்கு இருந்த உறவு, எம்ஜியாரின் உலக அறிவு, எப்படி எல்லாம் இந்திய அரசியலை நாம் பாவித்தோம் என்றெல்லாம் விபரித்தெழுதிச் செல்லும் பாலா எம்ஜியாரின் மரணத்துக்கு பிறகு ராஜீவ் காந்தி வரை செல்லாது அந்த அத்தியாயத்தை முடித்துக்கொள்கிறார்.
தொடர்த்து வரும் அத்தியாயங்களில் தனது வாசிப்பின் ஆழ அகலத்தை வாசகனுக்கு தெரியப்படுத்தும் மொழி நடை நினைவு கோரப்படவேண்டிய ஒன்று.
பொத்தம் பொதுவாக இன்னென்ன காலகட்டத்தில் இன்னென்னார் என்னென்ன சொன்னார்கள் என்ற விளக்க உரையுடன் அந்த புத்தகம் முடிவுக்கு வருவது ஆசிரியரின் எதிர்பார்ப்பு யுத்த முனையில் நேர்விரோதமாய் இருப்பது போல வாசகர்களையும் தொற்றிக்கொள்கிறது.
மீண்டும் தொடர்வேன்...........அனுமதித்தால்........

<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell